ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளா வழி வழியாக வாழ்ந்து பல விசயங்களை தன் அனுபவத்தால் உணர்ந்து தனது வாரிசுகளுக்கு சொல்லிக்கொடுத்து சென்றார்கள் நம் பாட்டன் பூட்டன்கள்.
ஆனால் இப்போதைய சந்ததிகள் எழுத்தாளர் ஒருவரின் எண்ணங்களை மட்டும் திணித்து எழுதப்பட்ட புத்தகங்களை படித்துவிட்டு அதுதான் உண்மை என்று நம்பிக்கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம்.,. அச்சேற்றப்பட்ட அனைத்தையும் உண்மை என்று நம்பிக்கொண்டு நம் வருங்கால சந்ததிகளுக்கு எதையையும் மிச்சம் வைக்காமல் முன்னேற்றம் என்ற பெயரில் வளங்களை அழித்துக்கொண்டு இருக்கிறோம்.,
கேட்டால் நாங்கள் பகுத்தறிவுவாதிகள் எங்களுக்குதான் எல்லாம் தெரியும் உங்கள் முன்னோர்கள் முட்டாள்கள் என்று பேசுவார்கள், அதையையும் நாம் கைகொட்டி சிரித்து ரசிப்போம். நம் அப்பன், ஆத்தாவை யாராவது பழித்துபேசும்போது நமக்கு கோவம் வரவேண்டும் ஆனால் நாமோ அதை கேட்டு ரசிக்கிறோம்.
நம் முன்னோர்களுக்கு எதுவும் தெரியாமல் இல்லை, அனைத்தும் அறிந்த அவர்கள் பல விசயங்களை செய்யாமல் தவிர்த்தார்கள். உதாரணம் அவர்கள் வீடு கட்டுவதற்க்கு ஒருபோது ஆற்றுமணலை பயன்படுத்தியது கிடையாது. தன்னுடைய சுயவிருப்பத்திற்கு இயற்கை வளங்களை பயன்படுத்தியது கிடையாது.
அதனால் ஆற்றில் மணல் அள்ளாதீர்கள் என்று சொன்னால் இந்த பகுத்தறியும் வியாதிகள், ஆற்றில் மணல் எடுத்தால் ஆறு ஆழம் ஆகும். ஆறு ஆழம் ஆனால் நல்லதுதான் என்று மக்களை நம்பவைத்துள்ளார்கள்.
அதாவது மிகசரியாக 1 டன் மணல், 1.5 டன் தண்ணிரை சேமித்து வைக்கும். ஆக காவிரி ஆற்றில் ஈரோடு கொடுமுடி முதல் நாகப்பட்டினம் கடற்கரை வரை இருக்கும் மணல், பல கோடான கோடி லிட்டர் தண்ணிரை சேமித்து வைக்கிறது. இது நமது மேட்டூர் டேமில் தேக்கிவைக்கும் தண்ணிரை விட பல லட்சம் மடங்கு அதிகம்.
மணல் அள்ளப்படுவதால் இந்த தண்ணீர் அனைத்தும் மழை காலங்களில் சேமிக்கப்படாமல் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இதனால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் தண்ணீர் தேங்கி செல்லாமல் வேகமாக ஓடவும் இது வழிவகை செய்கிறது. இதனால் மலைபிரதேச(கொங்கு) பகுதிகளில் அளவுக்கு அதிகமான மண் அரிப்பை இது ஏற்படுத்துகிறது. இவ்வாறு கிடைக்கும் நீரை நாம் முறையாக பயன்படுத்தாமல் எத்தனை காலத்திற்க்கு தண்ணிருக்காக சண்டைப்போட்டு கொண்டு இருப்போம்.
ஆனால் நமது பக்கத்துமாநிலமான கேரள மற்றும் கர்நாடகாவில் மணல் அள்ள தடை இருக்கிறது. அந்த மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஆறுகளிலும் நீரானது தேங்கியபடியே ஓடும்.. பள்ளி விட்டபின் குழந்தைகள் நேராக வீடு நோக்கி ஓடுவது போல கடலை நோக்கி அதிவிரைவாக ஓடிப்போகாது.,,.,.
அவர்கள் இங்கு இருந்து மணல் வாங்கி கட்டிடங்கள் கட்டுகிறார்கள்.,.,
குறிப்பு: அங்கு திராவிடக்கட்சிகள்(மணல் மாஃபியாக்கள்) ஆட்சியில் இல்லை.,.,.,
No comments:
Post a Comment