பல்லாயிரம் வருடங்களாக நம்முடன் கலந்து இருந்த ஒன்றை திட்டமிட்டு பிரித்தனர் ஆங்கிலேயர்கள். நம்மவர்கள் சகல துறைகளிளும் வல்லவர்களாக திகழ்ந்தனர். அப்போது, எப்படி தனி ஒரு மனிதன் அனைத்து துறைகளிலும் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கமுடிகிறது என்று தீவிரமாக ஆராயத்தொடங்கினான். அதனால் நம் கல்வி முறையை மிக உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார்கள்.
தற்பொழுது போன்று துறைக்கு ஒன்று தெருவுக்கு ஒன்று என்று கல்வி நிலையங்களை நடத்தி மனனம் செய்யும் மக்குகளை உருவாக்கவில்லை.
ஒரே ஒரு ஆசிரியர்(குரு) அனைத்து துறைகளிளும் மிக நுட்பமான அறிவுடன் தனது அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தனர்.
சுதந்திரம் கொடுத்தும் நாம் பல நூற்றாண்டுகள் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள், மெக்காலே கல்வி முறையை நம்முள் திணித்தனர்.. நம் பாரம்பரிய கல்வி முறையை ஒழித்தனர்.. நம் வரலாற்றை ஆய்வுசெய்கிறேன் பேர்வழி என்று நம் பல நூல்களை நமக்கே கிடைக்காமல் செய்துவிட்டனர்.
நமது பல ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சியின் பெயரால் திருடி ரகசியமாக தொகுத்து the secret என்ற புத்தகத்தை உருவாக்கினர்... இந்த புத்தகத்தை இன்று வரை பாதுகாத்து வருகிறார்கள்.
அவர்களுடைய பல கண்டுபிடிப்புகள் இங்கே இருந்து சென்றதுதான்.. அவை அனைத்தும் நமது கண்டுபிடிப்புகளே..ஆனால் காப்புரிமை அவர்களுக்கு...
முன்னூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு நமது மூவாயிரம் ஆண்டுகளாக வைத்திருந்த பொக்கிஷங்களை இழந்துவிட்டோம்...
அதற்கு அவர்கள் போட்ட அஸ்திவாரம்தான் பள்ளிக்கல்வி முறை.. இந்த படத்தில் உள்ள பள்ளிக்கூடம் தான் இந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட பள்ளி...
இதை நினைத்து பெருமைப்படுவதா வெட்கப்படுவதா என குழம்பி போயிருக்கிறேன் நான்...
இடம் : சேவூர். சாலைப்பாளையம்
more details about seur: http://sevurwar3.blogspot.in/
No comments:
Post a Comment