Wednesday, 13 July 2016

வெள் - வேள்

குறில் நெடிலாக திரிபது இயல்பு,
உதாரணம்
“தெங்காய்” என்பது பிற்காலங்களில் “தேங்காய்” என்று திரிந்தது,
இங்கு ”தெ” என்ற குறில் ”தே” என்ற நெடிலாக உருவம் பெறும்.
அதுபோல்
”வெள்” என்ற சொல்தான் மூலச்சொல் பிற்காலங்களில் அது ”வேள்” என்று திரிந்து வழங்கியது.
அதற்கு காரணம் பல “வெள்” களை குறிக்க “வேளிர்” என்ற சொல் தேவைப்பட்டதால் “வெள்” என்ற சொல் “வேள்” என்று திரிந்தது.
“வெள்” என்றால் ஒளி அதாவது வெளிச்சம் என்று பொருள். அல்லது சுத்தமான என்று பொருள் கொள்ளலாம்.
ராஜா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வெளிச்சம் என்று பொருள். அதன் தமிழ் சொல்தான் வெள் என்பது,
M.L.A வை எப்படி Ex M.L.A என்று அழைக்கிறோமோ அதுபோல ஆட்சியை இழந்த “வெள்” என்பவை “வெள்ளாளன்” என்று அழைப்பார்கள்,
வேளாளன் என்பது திரிபு.
200 வருடங்களுக்கு முந்தைய எந்த கல்வெட்டிலும், “வேளாளன்” என்று பார்க்க முடியாது. அனைத்து கல்வெட்டுகளிலும் “வெள்ளாளன்” என்றுதான் இருக்கும்.
அதே போல் தோட்டத்தில் என்ன வெள்ளாமை என்றுதான் கேட்பார்கள் ஒழிய என்ன வேளாண்மை என்று கேட்க மாட்டார்கள்.
ஆக வெள்ளாண்மை என்பதுதான் சரியா சொல், வேளாண்மை என்பது தவறான சொல்.
வெள்ளத்தை ஆள்பவன். வேள் என்றால் விருப்பம் போன்ற அர்ந்தங்கள் பிற்காலங்களில் கற்பிக்கப்பட்டவை. ஒரு காலத்தில் நானும் அதை நம்பிக்கொண்டு இருந்தேன். வாசிப்பு அதிகம் ஆக ஆக எல்லாம் புரிகிறது.

2 comments:

  1. கவுண்டர்கள் தோட்டம் எனக் கூறாமல் காடு என்கின்றனரே ஏன்? விளக்கம் தர முடியுமா

    ReplyDelete
  2. வெள் வேள் வேளீர் என்பது தலைவன் அரசன் சமஸ்கிருதத்தில் வெளிச்சம் என்றால் ராஜா எல்லாம் சரிதான் ஆனால் வெள்ளாளர் என்பது வெள் வேள் என்ற சொல்லில் இருந்து உருவானது இல்லை வேளம் என்ற சொல்லில் இருந்து உருவானது வேளம் ஆள் வேளத்தைஆள்பவன் என்ற சொல் தான் வேளாளர்
    அக்காலத்தில் வே இரட்டை கொம்பு என்பது கிடையாது என்பதால் வெள்ளாளர் என்று தான் கல்வெட்டில் இருக்கும் அதனை கல்வெட்டு ஆய்வாளர்கள் படியெடுத்து எழுதும்போது வேளாளர் என்று தான் எழுதுவார்கள் வேளம் மக்கள் நீங்கள் தான் என்பதை மறைக்க வெள் வேள் வேளீர் என்று அடுத்தவர்கள் வரலாற்றை திருடாமல் உண்மை வரலாற்றை பதிவு செய்யுங்கள் உங்களுக்கும் வேளீருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete