Friday 29 April 2016

பால குலம்

"பால குல வங்கிஷம்"

என்று வீரச்சோழன் பட்டையத்திலும்
சோழியாண்டர் பற்றிய மெக்கன்சி குறிப்பிலும் வரும்

அவர்களை அவ்வாறு கூற என்ன காரணம் இதற்கு என்ன பொருள் என்று தெரியாமல் பல வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் மனம்போன போக்கில் எழுதுகிறார்கள் ஆனால் உண்மை அதுவல்ல

உதாரணம்

தூவராபாலகர்கள் என்று கூறுவோம் அதற்கு வாயிற்காவலர்கள் என்று பொருள்

அஷ்டதிக்கு பாலகர்கள் என்று கூறுவோம் அதற்கு எட்டுதிசைகளை காப்பவன் என்று பொருள்

பாலபண்டியன் பற்றி கூறும் திருமங்கை ஆழ்வார் "பாலித்து அருளியதால் அவன் பால பாண்டியன்" என்று அழைக்கப்பட்டான் என்று கூறுவார் பாலித்தல் என்றால் காத்தல் என்று பொருள்

ஆக பால என்றால் காத்தல் என்று பொருள்

இதனை தமிழ் லெக்சிகன் அகராதி மற்று வேறுஅகராதிகள் என எதில் தேடினாலும் காப்பவன் என்று பொருளையே கூறுகிறது

நாட்டையும் மக்களையும் காக்கும் குலம் என்ற பொருளில்தான் "பால குல வங்கிஷம்" என்று கூறுகிறார்கள்

வங்கிஷம் என்றால் வம்சம் என்று பொருள்



வன்னியர்

நெல்லு போட்டால் நெல்லு முளைக்கும்

கொள்ளுப்போட்டால் கொள்ளுதான் முளைக்கும்

அதன் அடிப்படையில் சூரிய குலத்தை சேர்ந்த சோழன் வாரிசுகள் சூரியகுலத்தை சேர்த்தவர்களாகத்தான் இருப்பார்கள் அவர்கள் எப்படி அக்னி குலமாக இருக்கமுடியும்

வன்னியர்கள் அனைவரும் அக்னி குலத்தை சேர்ந்தவர்கள்

வன்னி என்றாலே நெருப்பு என்று அனைத்து அகராதிகளும் பொருள் சொல்லுகிறது நெருப்பின் சமஸ்கிருத சொல்லுதான் அக்னி என்பது

எப்படி பார்த்தாலும் வன்னியர் அக்னி குலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் எப்படி சூரிய குலத்தை சேர்ந்த சோழராக இருக்கமுடியும்

விதையே மாறி விடுகிறதே

அரசியலுக்கு வேண்டி என்ன வேண்டுமனாலும்பேசலாம் என்று பேசினால் கடைசியில் இப்படித்தான் அவமான படவேண்டியிருக்கும்



பால வெள்ளாளர்

உலகிற்கு முதன் முதலில் விவசாயத்தை கற்று கொடுத்தவர் போதாயனர்

அவ்வாறு கற்று கொடுத்த போதாயனர் அவர் போதித்தபடி விவசாயம் செய்து வாழும் மக்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற சூத்திரத்தையும் வகுத்துவைத்து சொன்றுயுள்ளார்

அவர் வகுத்து கொடுத்த சூத்திர படி இன்று வரை வாழும் இனக்குழுதான் வெள்ளாளர் இனக்குழு

இந்த இனக்குழுவிற்குள் நான்கு வர்ணமும் அடங்கும். இதனை புறநானூறு 183 ஆம் பாடல் தெளிவாக விளக்குகிறது

அந்த பாடலில் வேற்றுமை தெரிந்த நாற்பால்(நான்கு வர்ணம்) என்பது ஒரு குடிக்குள்தான் இருக்கும் என்று கூறும்

இந்த வர்ண பேதம் உழவு குடிக்குள் மட்டுமில்லை மொத்த 18 குடிகளுக்குள்ளும் இந்த நான்கு வர்ணம் இருக்கும்.

குடி வட்டத்திற்குள் வராத ஏனைய இனக்குழு(காட்டு வாசி) களுக்கு வர்ணம் பிரிக்கப்பட்டிருக்க வில்லை.

ஆகையால் வர்ணம் பிரிக்கபட்ட ஒவ்வொரு குடிக்கும் கட்டாயம் எப்படி வாழவேண்டும் என்ற சூத்திரம் இருக்கும் .,

ஒரு குடிக்கு என்ன என்ன அவசியம் இருக்கவேண்டும் என்று இந்த பதிவில் உள்ள படத்தில் பார்த்துக்கொள்ளவும்.,.



கோத்திரம்

கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என்ன

கோ + மித்திரம் என்ற சொற்களின் கூட்டே கோத்திரம் என்ற சொல்
கோ என்றால் தலைவன் என்று பொருள்

மித்திரம் என்றால் குழுக்கள் அல்லது கூட்டம் என்று பொருள்

அதாவது கூட்டம் கூட்டமாக வாழும் மக்களின் கோ(தலைவன்) பெயரால் ஏற்படும் பெயர்தான் கோத்திரம் என்பது

ஆக கோத்திரம் என்பதன் சரியான தமிழ் சொல் கூட்டம் என்பது

சும்மா தமிழ் தமிழ் என்று ஊழையிட்டால் போதாது நமது வாழ்வியல் முறையிலும் தமிழ் இருக்க வேண்டும்

கோத்திரம் என்ற சமஸ்கிரத சொல்லை தமிழில் கூட்டம் என்று சொனனால் ஏற்க மாட்டார்களாம் சமஸ்கிருதத்திலேயே சொன்னால்தான் ஏற்பார்களாம்
என்ன ஒரு தமிழ் பற்று போங்க

தமிழின் தொன்மை

ஜாதி என்ற வட்டத்தை தாண்டி நாம் பேசும் மொழி தமிழ் என்ற உணர்வோடு படியுங்கள்.
இந்த பதிவின் உள் அர்ந்தம் புரியும்.

ஆந்தை கூட்டம்

இந்த பெயரை கேட்டவுடன் கொங்கு வெள்ளாளர்கள்தான் நம் நினைவுக்கு வருவார்கள். காரணம் இதுபோன்ற தொன்மையான கோத்திர பெயர்கள் தமிழகத்தில் எந்த இனக்குழுவிடமும் இல்லாமல் இவர்களிடம் மட்டுமே உள்ளது.

இந்த இனக்குழுவைத்தான் அமெரிக்காவின் போர்டு பவுண்டேசன் தற்பொழுது குறிவைத்துள்ளது. பெருமாள் முருகன் என்ற எழுத்தாளருக்கு 12 லட்சம் கொடுத்து நூலை எழுத வைத்துள்ளார்கள் அது போல் கரூர் பாதிரியார் என நீண்டு கொண்டே போகிறது.

அவ்வாறு ஒரு குறிப்பிட்ட இனகுழுவை தாக்கி எழுத ஏன் அமேரிக்க மிஷனெரிகள் போட்டி போட்டுக்கொண்டு நிதியுதவி செய்ய வேண்டும். அது பற்றி தொடர்ந்து பார்ப்போம்

நமது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ் தமிழ் என்று உயிரை கொடுப்பதுபோல் நடிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் காரணம் தொல்காப்பியம் கூறும் உண்மையான தமிழ் சொற்கள் நிரம்பி காணப்படுகின்ற இது போன்ற இனக்குழுக்கள் தாக்கி எழுதப்படும்பொழுது அதை கண்டிக்க கூட மாட்டோம் என்று கண்னை கட்டிக்கொண்டு இருக்கிறது.
அத்துடன் தற்பொழுது எழுத வரும் வரலாற்று ஆய்வாளர்களும் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம் கூட்டம் என்றால் கோத்திரம் என்று போன பதிவில் பார்த்தோம். அதில் எந்த குழப்பமும் இல்லை ஆனால் அது என்ன ஆந்தை, “ஆந்தை” என்றால் பறவை வகை என்று பாமர மக்கள் கருதுவார்கள். ஆனால் ஆய்வாளர்களுக்கு இது பற்றி நன்கு தெரிந்தும் வெளியே சொல்ல மனது இல்லாமல் ஒதுக்கிவிடுகிறார்கள்.

நமது இலக்கண நூலான தொல்காப்பியம் ஒரு சொல் எவ்வாறு பொருள் பிரியும் அதே போல் இரண்டு சொற்கள் சேர்ந்தால் எவ்வாறு திரியும் என்று தெளிவாக சொல்லியுள்ளது.

தொல்காப்பிய விதிபடி “ஆந்தை” என்ற சொல்லை பிரித்தால் “ஆதன் + அந்தை” என்று பிரியும் இதில் “அந்தை” என்றால் தலைவன் என்று பொருள். சிலர் தந்தை என்று பிரிப்பார்கள் அது தவறு.

அதாவது ஆதன்களின் தலைவன் என்பதே இதன் பொருள். இந்த பதிவில் இருக்கும் படம் 1 யில் பார்க்கவும் அந்த கல்வெட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழ் எழுத்துவடிவத்தின் துவக்க காலம். அந்த கல்வெட்டில் “கோ-ஆதன் செல்லி” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதில் “கோ” என்றால தலைவன் என்று பொருள் அதாவது “ஆதன்களின் தலைவன்” என்று பொருள்
அதில் “செல்லி” என்று வரும் பெயர் அவர்களின் குலதெய்வத்தின் பெயர் இன்றும் ஆந்தை கூட்டத்தினர் அதே பெயரில் வழிபட்டு வருகிறார்கள். இரும்பொறை என்பது சேரனின் பெயர்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாறு எந்த இனக்குழுவுக்கும் இதுவரை ஆதாரத்துடன் கிடைக்கவில்லை. இந்தியாவில் மட்டுமில்லை உலக அளவில் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
அடுத்து படம் 2 -யில் பார்க்கவும் அதுவும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது, இந்த கல்வெட்டு ஆந்தை கூட்டத்தின் கல்வெட்டுக்கு அருகே கிடைக்கிறது. அதில் “ கொற்றந்தை இளவல்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கொற்றந்தை என்னும் கோத்திரம் பால வெள்ளாளர் என்ற பிரிவில் வரும் ஒரு கோத்திரம்.

அடுத்த படம் 3 - யில் பார்க்கவும் அதுவும் மேற்கண்ட கல்வெட்டுகளின் சமகாலம் கல்வெட்டு ஆகும். அதில் “ஆதன்” என்ற கோத்திரம் பொறிக்கபட்டுள்ளது. இது தற்பொழுது பால வெள்ளாளர் மற்றும் கொங்கு வெள்ளாளர் என இரு பிரிவிடமும் வழங்கப்பெறும் கோத்திரம் ஆகும்.
அடுத்த படம் 4-யில் பார்க்கவும் இந்த கல்வெட்டு 1500 ஆண்டுகள் பழமையானது. அந்த கல்வெட்டில் “வண்ணக்கன்” என்ற கோத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோத்திரம் தற்பொழுது கொங்கு வெள்ளாளர்களில் ஒரு கோத்திரம் ஆகும். அதில் “வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்று கூறுகிறது. சாத்தன் என்பது சேரனின் பெயர் என்பது கவனிக்கதக்கது.

இவ்வாறு மிகவும் தொன்மையான வரலாற்று எச்சங்களை தாங்கி நிற்கும் இனக்குழுவை கோவல படுத்த பல நாடுகள் போட்டிபோடுகிறது. அதற்கு முதல் காரணம் இவர்களின் கலாச்சாரத்தை சிதைத்தால்தான் இந்து மதத்தின் கலாச்சாரத்தை சிதைக்கமுடியும். அதன் பிறகே மதம் மாற்று வேலையை தொடங்கமுடியும்.

இதை இங்கு உள்ளவர்களும் புரிந்து கொள்ளாமல் இது போன்ற கேவலமான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு வருவது வருத்ததிற்குரியது.

இவ்வாறு மிகபழமையான தமிழ் மொழியின் எச்சங்களை தாங்கி நிற்கும் குழுவினரை காக்காமல் இவர்களால் எப்படி தமிழை காக்கமுடியும்.
இந்த செய்தியை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள் ஜாதி என்ற வட்டத்தை தாண்டி நமது மொழி தமிழ் என்ற உணர்வோடு.

இதுபோன்ற பழமைகளை ஜாதிகள்தான் இன்று வரை காத்து நிற்கிறது என்பதும் நிதர்சனமான உண்மை.








நல்லூடையார் நடுகல்

நல்லூடையார் நடுகல்

உடனே உடையார் ஜாதி என்று நினைக்க வேண்டாம் காரணம் உடையார் என்பது பட்டம்

அதேபோல் இந்த நடுகல் அவர் வேட்டைக்கு சென்று உயிரிழந்த இடத்தில் நடப்பட்ட நடுகல்

வேட்டைக்கு சென்றதால் உடனே வேட்டுவர் என்று எண்ண வேண்டாம் அந்த சிற்பத்தில் அவருக்கு சாமரம் விசப்படுகிறது

சாமரம் வெள்ளாளருக்கு உரியது என்று இடங்கை வலங்கை புராணம் கூறும்

இவர் கன்டியன்கோயில் ஓதாளன் கோத்திரம்

இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் பட்டத்தை வைத்து வரலாறு எழுதினால் அவர் உடையார் ஜாதி என்றும் இல்லையென்றால் வேட்டுவர் ஜாதி என்று எழுதுவார்கள்

வரலாறு ஆய்வு செய்யும் போது குலம் கோத்திரம் வைத்துதான் முடிவு செய்யவேண்டும்

பட்டத்தை வைத்து முடிவுக்கு வந்தால் அது உண்மையான வரலாறு இல்லை

தற்பொழுது நாம் படிக்கும் அனைத்து வரலாறும் இதுபோன்று எழுதப்பட்டதுதான்

அது எப்படி உண்மையான வரலாறாக இருக்கமுடியும்

திராவிட கொள்கை நமக்கு கிடைத்த சாபம்

புரிந்தால் சரி



திருமுருகன் பூண்டி கிரைய சாசனம்

வரலாற்றில் பல இடங்களில் கழஞ்சு என்ற பொன் நாணயம் குறிக்கப்படும்

இதனை ஒரு பொன் என்றும் அழைப்பார்கள்.
ஒரு பொன் என்பது 4.4 கிராம் எடையுடையதாக இருக்கும்.

கொங்கு சோழர்கள் ஆட்சி விழ்ச்சி அடைந்து நாய்க்கர் ஆட்சி ஏற்படும்போது நாய்க்கர்கள், கொங்கு சோழன் உடனடியாக 25,000 பொன் வரி செலுத்தவேண்டும் இல்லையென்றால் திருமுருகன்பூண்டியை(தலைநகரம்) விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்துவிடுவார்கள்.

அதாவது 25,000 X 4.4 கிராம் = 1,10,000 கிராம்
அதாவது 1,10,000 / 8 கிராம் = 13,750 சவரன் (பவுன்)
கிட்டதட்ட 14 ஆயிரம் பவுன் தேவை

அவர்களிடம் 10,000 பொன் அல்லது 5,500 சவரன் மட்டுமே கைவசம் இருந்தது அவ்வளவு பெரிய தங்கத்தை செலுத்த முடியாமல் சோழன் தடுமாறுவான்.

இன்னும் 15,000 பொன் தேவை

இந்த இக்கட்டான நிலையில் சோழர்களிடன் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எந்த நிபந்தனையின்றி தானாக முன்வந்து எழுமாத்தூர் பனங்காடன் கோத்திரம், ஆந்தை கோத்திரம், செல்ல கோத்திரத்தை சேர்ந்த மூன்று போர் தங்களிடம் இருந்து ஆளுக்கு 5,000 பொன்னை போட்டு சோழருக்கு பற்றாக்குறையாக இருந்த 15,000 பொன்னை வழங்கினார்கள்

அதாவது
5000 பொன் X 4.4 கிராம் = 22,000 கிராம்
22,000 கிராம் / 8 கிராம் = 2,750 பவுன் (சவரன்)

அதாவது கிட்டதட்ட மூன்றாயிரம் பவுன் ஆள் ஒன்றுக்கு கொடுத்து சோழர்களின் இடர் நீக்குவார்கள்

மூன்றாயிரம் பவுன் என்பது இன்றைய நாளையில் எவ்வளவு பெரிய தொகை என்று நினைத்துபாருங்கள். இவ்வளவு பெரிய தொகையை யாராவது சும்மா தூக்கி கொடுத்துவிடமாட்டார்கள்.

ஆனால் அன்று அந்த மூன்று நபர்களும் சோழனின் இடர் நீக்க ஆளுக்கு மூன்றாயிரம் சவரன் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கொடுத்தார்கள் என்றால் அது மிகவும் போற்றபட வேண்டியது.

அதே சமயம் இவர்களின் ஈகை பண்பை மதித்த சோழன் இவர்களின் இந்த உதவிக்கு நன்றி பாராட்டும் விதமாக

1. பனங்காடன் கோத்திரத்தாருக்கு திருமுருகன்பூண்டி காணியையும்

2. ஆந்தை கோத்திரத்தாருக்கு பழங்கரை காணியையும்

3. செல்லன் கோத்திரத்தாருக்கு தொரவலூர் காணியையும்

கிரையம் எழுதிக்கொடுப்பார்கள்.

காணி என்பது இன்றைய நாளில் ஒரு கிராம பஞ்சாயத்து அளவு பரப்பு இருக்கும் நிலப்பகுதி

அவ்வாறு அவர்களுக்கு கிரையம் எழுதிக்கொடுத்த பட்டையம் இன்றும் திருப்பூர் விஜயாபுரம் மணிகாரர் வீட்டில் உள்ளது.

இதன் நகல் தஞ்சை சரஸ்வதி ஓலைசுவடி காப்பகத்தில் ஒன்றும். ஈரோடு கலைமகள் கல்விநிலைய அருங்காட்சியகத்தில் ஒன்றும் உள்ளது.

இந்த பட்டையத்தை எழுத்தாளர் திரு.ராமசந்திரன் ஐயா அவர்கள் பார்வையிட்ட போது எடுத்தபடம். உடன் இருப்பவர் விஜயாபுரம் மணிகாரர் வாரிசு திரு.சிவக்குமார் அவர்கள்.

எழுத்தாளர் திரு.ராமசந்திரன் ஐயா அவர்கள் சென்னையில் South Indian Social History Research Institute (SISHRI) என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்



சித்திரை திருவிழா

சித்திரை 1

சித்திர மேழி வைபவம்

அது என்ன சித்திர மேழி வைபவம்

முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது

சித்திர என்ற சொல் சமஸ்கிருத சொல்

சித்திர = மதி, அழகிய அல்லது பொன் என்று பொருள்படும்
மேழி = கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும்
வைபவம் = திருவிழா என்று பொருள்

அதாவது தமிழில் பொன் ஏர் பூட்டும் திருவிழா என்று அழைக்கப்படும்

சங்க இலக்கியத்தில் மற்றும் சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா சிறப்பாக கூறப்படும்

சிலப்பதிகாரத்தில் ஏர்மங்கலம் என்ற தலைப்பில் ஒரே பாடலே தனியாக இருக்கும்

பொன்ஏர் என்றும் மதிஏர் என்று அழைப்பார்கள்

தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவை தொடங்கிவைப்பான்

இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் தான் உழவன் என்றும் அதேபிறகே அரசன் என்பதை பறைசாட்டுவதே ஆகும்

இதை திருவள்ளுவர் அழகாக கூறுவார்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார் "

என்ற குறள் மூலம் உழவனை தொழுதுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று கூறுகிறார்

இந்த சித்திர மேழி வைபவம் மகத பேரரசின் தலையாய அரசு விழா
இதை நமது இலக்கியங்களில் மட்டுமில்லை புராணங்களிலும் பார்க்கலாம்

சூரிய குல க்ஷத்திரியர் ஜனக மாஹராஜவால் இதே போல் சித்திரை முதல்நாள் பொன்னேர் பூட்டி உழும்போது சீதா தேவி பூமிக்கு அடியில் இருந்து கிடைப்பால்
ஆகையால்தான் சீதாவை பூதேவி மகள் என்று கூறுவார்கள்

இந்த நிகழ்வு இந்தியா முழுவதிற்கும் உரியது ஆனால் இன்று விழாவையும் மறந்துவிட்டார்கள் உழவனையும் மறந்துவிட்டார்கள்

முதலில் தான் உழவன் பிறகுதான் அரசன் என்று கூறி அரசன் நடத்தும் விழாவை இன்றுவரை கம்போடியா அரசு செய்து வருகிறது

இவ்வளவு பெருமை வாய்ந்த சித்திர மேழி வைபவத்தை தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடும் அனைவருக்கும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
படம் : கம்போடிய அரசர் பொன்னேர் பூட்டும் வைபவம் இன்றும் நடக்கிறது


குரு சாட்சாத் பரப்ரம்மம்

குரு என்ற பதம் சிவபிரமணர்களுக்கு மட்டுமே உரியது

ஆயிரம்தான் முக்கி முக்கி வேதங்களை கற்று இருந்தாலும் மற்றவர்கள் வெளியில் நின்று வேத பாரயணம் செய்யலாமோ வழிய சுவாமியை தொட அருகதையற்றவர்கள் என்பதே எதார்ததம்

அம்பட்டன் கோன் சடங்கவி என்று கல்வெட்டுகள் அம்பட்டர்களை கூறும்
சடங்கவி என்றால் வேதத்தின் ஆறு அங்கங்களையும் கற்று தேர்ந்தவன் என்று பொருள்

அந்த அம்பட்டர்கள் பிரமண வர்ணம்
ஆனால் அவன் கொவிலுக்குள் செல்லமுடியாது

அதே போல் விஸ்வ பிரமணர்கும் வேதங்களை நன்கு கற்று தேர்தவர்கள் பிரமண வர்ணம் ஆனால் அளிஜாதி அதாவது இடங்கை ஜாதி

நாடார்களில் ஒரு பிரிவு பார்பன சான்றான் இவர்கள் உரிமை பற்றி அவினாசி கோவில் கல்வெட்டு கூறும் அவர்களும் வேதங்களை நன்கு கற்று தேர்தவர்கள் நித்திய அனுஷ்டானங்களுக்கு உரியவர்கள் அதாவது சூரிய கயத்திரிக்கு
அவர்களும் பிரமண வர்ணம்தான்

இதை ஏன் சொல்கிறேன் என்றால் எல்லா பிரமணர்களும் ஒன்று கிடையாது
அவர் அவர் குடிக்குள் இருக்கும் பிரமணர்கள் அவர் அவருக்குரியவர் அது போலத்தான் சிவபிரமணர்கள் உழுகுடிகளுக்கு உரியவர்கள்

இவர்கள் உழுகுடியில் இருந்து உருவான பிரமண வர்ணம் அதனால்தான் தங்களை ஏர் கலப்பை பட்டன் என்று அழைத்துக்கொள்வார்கள்

ஏர்கலப்பை பட்டன் என்று சொல்லும் கல்வெட்டு மட்டும் ஐம்பது கல்வெட்டுக்கள் கிடைக்கிறது

வெள்ளாளர்களை பொறுத்தவரை சிவபிரமணர்களை தவிர மற்றவர்கள் அன்னியர்களே

எங்களுக்கு குரு சாட்சாத் பரப்ரம்மம்



Thursday 28 April 2016

சுடு பொம்மைகள்

கொங்கு நாட்டில் பெருங்கற்கால சுடுமண் சிற்பங்கள் (terracotta)

மற்றும் இரும்பு உருக்குகள்

முதுமக்கள் தாழி

சங்கு வளையல்கள்

போன்றவை அதிக அளவில் கிடைக்கிறது

கொங்கு நாட்டில் பல பகுதிகளுக்கு வரலாற்று ஆய்வுகளுக்கு சென்ற போது எனது கைக்கு கிடைத்த சுடுமண் பொம்மை

இன்னும் கற்கருவிகள் போன்றவை கிடைத்தது முழுஆய்வும் முடிந்தவுடன் இன்னும் பல விவரங்களை வெளியிடுகிறேன்



ஆகமத்தின் காலம்





சமணத்தின் எழுச்சிக்கு பிறகுதான் ஆகமங்கள் சிறப்பு பெற்றது என்று சில அறிஞர்கள் எழுதுகிறார்கள்

இது அடிப்படையில் தவறு

காரணம் இறைவனின் லட்சணங்கள் ஆகமத்தில் மட்டுமே கூறப்படுகிறது

அதிலும் குறிப்பாக தட்சிணாமூர்த்தி லட்சணம் சிவாகமத்தில் மட்டுமே கூறப்படுகிறது

"ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்" புறம்-198

இதில் தட்சிணாமூர்த்தி கூறப்பெறுகிறார்

"ஆல்மர செல்வன் அணிசால் பெறுவிறல்" கலித்தொகை-87

இதில் தட்சிணாமூர்த்தி லட்சணம் கூறப்பெறுகிறது

"ஆல்மர் செலவற் கமார்ந்தனன் கொடுத்தாய்" சிறுபணாற்றுபடை-96,97

இதில் தட்சிணாமூர்த்தி கூறப்படுகிறார்

"தணிவுற்த தாங்கிய தனிநிறை சலதாரி(கங்கையை சூடியவன்) மணி மிடற்றணணல்"- பரிபாடல் 9 6/7

இந்த பாடலில் கங்கையை சூடிய வடிவம் கூறப்பெறுகிறது

"கொன்றை தாரன்"-புறம் 1

"செவ்வன் அன்ன மேனி"அகம்-1

இன்னும் இருக்கு அத்துடன் புறநானூறில் வேதத்தின் ஆறு அங்கமும் கூறப்பெற்று இறை லட்சணம் கூறப்படும்

ஆக சங்க காலத்தில் அதாவது சமணத்தின் எழுச்சிக்கு முன்பு இங்கு ஆகம வழியில் வழிபாடுகள் மிகவும் சிறப்புற்று இருந்தது என்பதை அறியலாம்




ஆகமம் என்பது வாகனம் போன்றது

வேதம் என்பது எரிபொருள் போன்றது

ஆகமம் என்ற வாகனத்தில் ஏறினால்தான் இறை என்பவன் இருக்கும் இடத்தை அடையமுடியும்

வெறும் எரிபொருளை மட்டும் வைத்துக்கொண்டு அதுதான் பெருசு அதனால் வாகனத்தில் ஏற மாட்டேன் என்று சொல்லுவது எதனால்

கோடி லிட்டர் எரிபொருள் இருந்தாலும் பயன் இல்லை

எரிபொருள் இல்லாத வாகனத்தினாலும் பயன் இல்லை

சூரிய குல க்ஷத்திரியர்கள்

சூரிய குல க்ஷத்திரியர்கள் யார்?

அக்னி குல க்ஷத்திரியர்கள்

சந்திர குல க்ஷத்திரியர்கள்

என்பவர்கள் யார் என்ற ஆய்வுக்கு நான் செல்லவில்லை

ஆனால் சீதையின் தந்தை ஜனக மஹாராஜா அவர்கள் சூரிய குல க்ஷத்திரியர்

இவர் ஏர் உழவு செய்யும் போது ஏர் கலப்பை பட்டு பூமியின் அடியில் இருந்து வந்தவள்தான் சீதா தேவி அதனாலையே அவளை பூமி தேவியின் மகள் என்று அழைக்கப்பட்டால்

சூரிய குல க்ஷத்திரியர்களின் குல தொழில் உழவு என்பதற்கு ராமாயணம் மிக சிறந்த உதாரணம்

சோழ தேசம் சூரிய குல க்ஷத்திரியர்களுடையது என்பது அனைவரும் அறிந்தது
அதேபோல் சூரிய குல க்ஷத்திரயர்கள் யார் என்று ராமயாணம் மட்டும் கூறவில்லை நச்சினார்க்கினியாரும் கூறுகிறார்

நச்சினார்கினியார் வாழ்ந்தது பதினொன்றாம் நூற்றாண்டு அதாவது சோழ பேரரசு உச்சத்தில் இருந்த காலம்

"மன்னர் பாங்கின் பின்னோர்" என்ற வரியில்

சோழ தேசத்தில் வேள் எனவும் அரசு எனவும் உரிமை ஏய்தியவர்கள் வேளாளர்கள் என்று கூறுகிறார்

அது மட்டுமில்லை அனைத்து அகராதிகளும் வளவன் என்றால் வேளாளன் என்று பொருள் கூறும்

சோழன் பூர்வ பட்டையம் சோழனை காளையை கட்டி உழுதுதிண்ணும் வெள்ளா பையன் என்று கூறும்

சோழன் பூர்வ பட்டையம் காஞ்சிபுரம் மீனாட்சியம்மன் கோவில் நிலவறையில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஆக சோழர்கள் சுத்தமான வேளாளர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை

அடுத்தவர்கள் வரலாறை திருடும் கும்பல் என்றுமே திருந்த போவதில்லை



சங்க காலத்தில் தாலி

சங்க காலத்தில் தாலி இருந்ததா?

தாலி தமிழர்கள் பண்பாடு இல்லை அதனால் அதை கழற்றி எறியப்படவேண்டும் என்று ஒரு கும்பல் அழைகிறது

குறிப்பு: இழை என்றால் நூல் என்று பொருள்

"மஞ்சை கணனொடு சேப்பனோ ஈகை அரிய இழையணி மகளிரோடு" - புறநானூறு 127

என்ற வரியில் உன் மனைவியிடம் இருக்கும் மங்கல அணியை தவிர மற்ற அனைத்தையும் தானம் கொடுத்துவிட்டாய் என்று ஆய் வேள்-யை பார்த்து புலவர் கூறுகிறார்

அதே போல் முத்தொள்ளாயிரத்தில் மங்கல நாண் என்று தாலியை கூறுகிறது

ஆக எந்த காலத்தில் இருந்து நமக்கு வரலாறு கிடைக்கப்பெறுகிறதோ அன்றில் இருந்து நம்மிடம் தாலி மங்கல பொருளாக இருந்துள்ளது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருக்கும் நமது பாரம்பரிய கலச்சாரத்தை சீர்குலைக்க பகுத்தறிவு என்ற போர்வையில் அழைகிறார்கள்



தில்லை வாழ் அந்தணர்கள்






தில்லை வாழ் அந்தணர் என்பவர்கள் ஏர் கலப்பை ஐயன் என்று போற்றப்படும் சிவாச்சாியர்கள்தான்

தீக்ஷ்சிதர்கள் இல்லை என்று சில ஆதாரங்களை காட்டி நான் ஏற்கனவே பதிவு போட்டிருந்தேன்

இதை படித்த சில வன்னிய நண்பர்கள் எனக்கு சாபம் கொடுத்தார்கள்

தீக்ஷ்சிதர்கள்தான் தில்லை மூவாயிரவர்கள் என்றும் என்னிடம் வாதாடினார்கள்

ஆனால் பலமான ஆதாரம் உள்ளது சிவபிராமணர்கள்தான் தில்லை வாழ் அந்தணர் என்று

தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு ஒன்று சிவபிராமணரைத்தான் தில்லை வாழ் அந்ததணன் என்று சொல்லுகிறது

இந்த படத்தில் இருக்கும் தருமபுரி கல்வெட்டும் தில்லை வாழ் அந்தணர் சிவபிராமணர் என்று கூறுகிறது

இது போல் இன்னும் மூன்று கல்வெட்டுகள் கிடைக்கிறது

நான் கூறுவதுதான் உண்மை
அதனால் உங்க சாபம் என்னை ஒன்றும் செய்து விடாது

உமாபதி சிவாச்சாரியரையே தீக்ஷ்சிதர் என்று புழுகி பதிவு போட்டாலும் ப்ளேக் எழுதினாலும் என்றுமே தீக்ஷ்திதர்கள் தில்லைவாழ் அந்தணர் ஆகமுடியாது

ஏர்கலப்பை ஐயன் என்னும் சிறப்பு பெற்ற சிவபிராமணர்கள்தான் தில்லைவாழ் அந்தணர்கள்

அடுத்தவன் வரலாறுக்கு ஆசை படாமல் போய் உங்க வரலாறை தேடுங்க

காடையும் இல்லை கவுதாரியும் இல்லை

காடையும் இல்லை கவுதாரியும் இல்லை

கொங்கு வெள்ளாளரில் இருக்கும் பல கூட்டங்களை பறவைகளுடன் தொடர்பு படுத்தி எழுதுகிறார்கள் இது அடிப்படையில் தவறு

இது முற்போக்கு பகுத்தறிவு என்று திரியும் சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது

கல்வெட்டுகளில் இருக்கும் பெயர்கள் எப்படி எல்லாம் திரிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக கீழே இருக்கும் கல்வெட்டை பாருங்கள் அதில்

"வெள்ளாளன் காடகளில் ஆடன் புலியனான உத்தமசோழ மும்முடிச் சோழ மாராயன்"

இதில் மிக உயரிய பட்டத்துடன் இருக்கும் காடன் கூட்டத்தாரை தற்பொழுது காடை என்ற பறவையுடன் தொடர்பு படுத்தப்படுகிறது

பல கல்வெட்டுகளில் காடன் என்றுதான் கிடைக்கிறது அதாவது காடுகள் நிறைந்த இடத்திற்கு உரியவன் என்று பொருள்

இதுபோல்

கூரன் - கூரை
கீரன் - கீரை
பன்னன் - பன்னை
தோடன் - தோடை
என்னன் - எண்ணை
வெளியன் - வெளையன்

என்று மாற்றப்பட்டுள்ளது

இதுபோல் செம்பூத்தான் என்று எந்த கல்வெட்டிலும் இல்லை செம்பூதன் என்றுதான் உள்ளது

அதாவது கண்ணன் மற்றும் செங்-கண்ணன் என்பது போல் பூதன் மற்றும் செம்-பூதன் என்ற வகையில் கூறப்படுகிறது

ஆனால் பகுத்தறிவு என்ற போர்வையில் செம்பூதன் என்ற பெயரை செம்பூத்தன் என்ற பறவையுடன் தொடர்பு படுத்திவிட்டார்கள்

அதே போல்

கண்ணன் + அந்தை = கண்ணந்தை

பூதன் + அந்தை = பூந்தை

சாத்தன் + அந்தை = சாத்தந்தை

கொற்றன் + அந்தை = கொற்றந்தை

பிள்ளன் + அந்தை = பிள்ளந்தை

இங்கு அந்தை என்றால் தலைவன் என்று பொருள்

அதாவது கண்ணன் என்ற கூட்டத்தை சேர்ந்தவனை தலைவனாக கொண்டு உருவான கூட்டத்தை கண்ணந்தை என்று அழைக்கப்பட்டது அதனாலேயே இவர்களுக்குள் மணவினை வைத்துக்கொள்வதில்லை

அதேபோலதான்

ஆதன் + அந்தை = ஆந்தை

என்று அழைக்கப்படுகிறது அதாவது ஆதன் என்பவனை தலைவானாக கொண்டு உருவான கூட்டமே ஆந்தை கூட்டம் என்பது

உதாரணம் ஆதன் ஓரி

ஆனால் இதனை ஆந்தை என்ற பறவையுடன் தொடர்பு படுத்தி வரலாற்று இருட்டடிப்பு செய்யப்படுகிது

இதேபோல் கொங்கு வெள்ளாளர்கள் சூரிய வம்சம் என்று மரபாள புராணம் கூறும் ஆனால் சேரன் சந்திர வம்சம்

ஆகையால் கொங்கு வெள்ளாளரை சேரனுடன் தொடர்பு படுத்தி பார்ப்பது வரலாற்று முரண் (ஆய்வு தேவை)

சுயநலத்திற்காக வரலாற்றை திரிக்கும் கூட்டமும் திருடும் கூட்டமும் இருக்கும் வரை ஒன்றும் செய்யமுடியாது

ஆகையால் சூரிய குல க்ஷத்திரியர்களே உங்க கூட்டங்களின் வரலாற்றை நீங்கதான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

சூரிய வம்சம் படம் பாருங்க சூரிய குலத்திற்கே உரிய உழைப்பு எப்படி பட்டது என்று தெரியும்

என்றுமே சூரியன் சூரியன்தான்



வண்ணக்கன் தேவன் சாத்தன்

கல்வெட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஐயா, வரலாற்று ஆய்வாளர் நந்தர் மற்றும் நண்பர் சிவக்குமாருடன் அறச்சலூர்(அற சாலை ஊர்) கல்வெட்டை காண நேற்று சென்றோம்

ரம்மியமான வனப்பகுதியுடன் கூடிய குகைத்தலம்

இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயரிய கல்வி போதிக்கப்பட்டுள்ளது

"அற சாலை ஊர்" என்னும் பெயரை கூறும் போதே அங்கு அறம் சார்ந்த கல்வி போதிக்கப்பட்டிருக்கு என்பதை உணர முடிகிறது

இதனை மறைய என்ற கல்வெட்டு வாசகமும் உறுதிபடுத்துகின்றது
இந்த கல்வெட்டை பலர் பலவிதமாக வாசித்துள்ளார்கள்

ராமச்சந்திரன் ஐயா அவர்களின் வாசிப்பு
"எழுத்து புனர்த்தான் மறயை
வண்ணக்கன் தேவன் சாத்தன்"

இந்த வாசகம் இசைகல்வெட்டுடன் சேர்த்து கிடைக்கிறது

உலகிலேயே 1700 வருடங்களுக்கு முன்பு கிடைக்கும் இசை கல்வெட்டு என்ற பெருமையை இது நமக்கு பெற்று தருகிறது

இந்த கல்வெட்டை வண்ணக்கன் குலத்தை சேர்ந்த தேவன் சாத்தன் என்பவன் தொகுத்து கொடுத்துள்ளான்





யார் உண்மையான க்ஷத்திரியர்கள்?

யார் உண்மையான க்ஷத்திரியர்கள்?

இன்று இருக்கும் பல ஜாதிகள் தங்களை க்ஷத்திரியன் என்று கூறிக்கொண்டு திரிகின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் 16 ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தங்களை க்ஷத்திரியர் என்று கூறி புராணம் எழுதிக்கொண்டார்கள். ஆனால், சோழனின் ஆட்சி காலத்தில் இவர்கள் உண்மையான க்ஷத்திரியர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அப்ப யார் உண்மையான க்ஷத்திரியர்கள், சோழர்களின்ஆட்சி காலத்தில் க்ஷத்திரியர்கள் என்று கல்வெட்டுள் யாரை கூறுகிறது என்று பார்ப்போம்.

சோழனின் ஆட்சி காலத்தில் சித்திர மேழி நாட்டார்கள் (வெள்ளாளர்கள்) மெய் கீர்த்தி பொறிக்கப்பட்ட கல்வெட்டக்கள் 200-க்கும் மேற்பட்டவைகள் கிடைக்கின்றன. மேழி என்றால் ஏர்கலப்பை என்றுபொருள். சித்திர என்றால் தெய்வதன்மை பொருந்திய என்று பொருள்.

சரி இந்த சித்திர மேழி நாட்டார்களை கல்வெட்டுகள் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.

---- * * * ----

"Sri மத் பூதேவி புத்ராநாம் ஸாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய சித்திர மேளஸ்ய ஸாஸநம்"

"ஜகதா மேதத் பாலநம் ராஷ்ட்ர போஷணம்"

"Sri பூதேவிக்கு மக்களாகி நிகழச் செந்தமிழ் வடகலை தெரிந்துணர்ந்து நீதி கேட்டு நிபுணராகி அறம் வளர கலி மெலிய புகழ் பெறுக மனு நெறி தழைக்க செங்கோலே முன்னாகவும் சித்திர மேழியே தெய்வமாகவுஞ் செம்பொற் பசும்பையே வேலியாகவும் க்ஷமையினோடு கருனையேய்தி சமைய தன்மம் இனிது நடாத்துகின்ற பெருங்காளரோம்"

---- * * * ----

என்று வெள்ளாளர்கள் பற்றிய மெய்கீர்த்தி தென்னிந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது

அதாவது, நான்கு வர்ணங்களாய் உதித்து சர்வ உலகத்தையும் காக்கின்றவர்கள் என்றும் சமஸ்கிருதத்தையும் செந்தமிழையும் நன்கு கற்று தேர்ந்து செங்கோலை முன் நிறுத்தி மனு நெறி தழைக்க நீதி செலுத்துகின்றவர்கள் என்று கூறுகிறது.

செங்கோல் க்ஷத்திரியர்களுக்கு உரியது என்பது குறிப்பிடதக்கது. மேற்கண்ட சமஸ்கிருத ஸ்லோகங்கள் வெள்ளாளர்கள்தான் உண்மையான க்ஷத்திரியர்கள் என்று தெளிவாக கூறுகின்றது. இந்த வெள்ளாளர்களில் இருக்கும் நான்கு வர்ணங்களை பற்றி கடந்த பதிவுகளில் விளக்கியுள்ளேன் ஆகையால் க்ஷத்திரியர்களை பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்

1).வெண்கொற்றகுடை
2).வெண்சாமரம்
3).வெண்சங்கு
4).அணங்குடை முரசு
5).ஏர் கலப்பை
6).வாள்
7).வில் அம்பு
8).ஆழி சக்கரம்
9).பூர்ண கும்பம்

போன்றவற்றவை சித்திர மேழி நாட்டார்களுக்கு உரியது என்று கீழ்கண்ட கல்வெட்டுகளின் வாயிலாக தெளிவாக அறிய முடிகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆழிச்சக்கரம்

இந்த சக்கரம் கிருஷ்ணர் கையில் இருக்கும் சக்கரம் போன்ற ஒருவகை ஆயுதம். இதனை பரம க்ஷத்திரியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த கல்வெட்டில் ஆழிச்சக்கரம் வெள்ளாளர்களுக்கு உரியதாக காட்டப்படுவதிலிருந்து வெள்ளாளர்கள்தான் பரம க்ஷத்திரியர்கள் என்பது உறுதி.

அது மட்டுமில்லை வெள்ளாளர்கள் வலங்கை க்ஷத்திரியர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று தாங்கள் க்ஷத்திரியர்கள் என்று பிதற்றும் மற்றவர்கள் அனைவரும் போலி க்ஷத்திரியர்கள்

"எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே"

"சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்"

என்ற பாடல்கள்தான் நினைவிற்கு வருகிறது



தமிழகத்தில் நான்கு வர்ணங்கள்

வெள்ளாளரில் இருக்கும் நான்கு வர்ணங்கள் பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தேன்

நண்பரின் வேண்டுகேளுக்கினங்க மீண்டும் பதிகிறேன்

---- * * * * ----

பிராமண வர்ணம்:

ஆதி சைவ சிவாச்சாரியர்கள்
கல்வெட்டுகள் இவர்களை ஏர் கலப்பை ஐயன் என்றே அழைக்கும்

இவர்களுக்கு உரியது திருமேழி அதனாலேயே இவர்கள் திருமேழியர் என்று அழைக்கப்படுவார்கள்

---- * * * * ----

க்ஷத்திரிய வர்ணம்:

காமிண்டர் என்ற பட்டம் உள்ளவர்கள் க்ஷத்திரிய வர்ணம்

கா என்றால் காத்தல் என்று பொருள்

மிண்டன் என்றால் வீரன் என்று பொருள்

நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் வீரன் என்று பொருள்

மேலும் இவர்களை பற்றிநேற்றைய பதிவில் காண்க

இவர்களுக்கு உரியது சித்திர மேழி ஆகையால் இவர்களை சித்திர மேழியர் என்று அழைக்கப்படுவார்கள்

---- * * * * ----

வைசிய வரணம்:

பிள்ளை பட்டம் பெற்றவர்கள் இவர்கள் பெருநில கிழார்கள்

சுய தொழில் அதாவது பன்னையம் நடத்துபவர்கள்

நிகண்டுகள்

தன சைியன்
பூவைசியன்
கோ வைசியன்

என்று தனிதனியாக பிரித்துக்காட்டும்

ஆனிறை காத்தல் பூ வைசியர் பணி "பூ" என்றால் பூமி என்று பொருள்

ஆனிறை காப்பவர்கள் பிள்ளை பட்டம் பெற்றவர்கள் என்று தொல்காப்பியம் கூறும்

இவர்களுக்கு உரியது பொன்மேழி ஆகையால் இவர்கள் பொன்மேழியர் என்று அழைக்கப்பட்டனர்

---- * * * * ----

சூத்திர வர்ணம்:

இவர்களும் பிள்ளை பட்டம் பெற்றவர்கள் ஆனால் இவர்களுக்கு கோத்திரங்கள் கிடையாது

இவர்கள் நிலகிழார்களிடம் உழவர்களாக இருந்தவர்கள்

காமிக ஆகமம் படலம் 25 கோத்திர நிர்ணய விதியில் கோத்திரங்கள் இல்லாதவர்களே சூத்திரர்கள் என்று கூறும்

இவர்களுக்குரியது மேழி ஆகையால் இவர்களை மேழியர் என்று அழைக்கப்பட்டார்கள்

---- * * * * ----

மேற்கண்ட நான்கு வர்ணமும் உழுவு என்ற குடிக்குள் இருந்தது

இதைத்தான் சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி

"பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய"

என்று கூறும்

நான் பல முறை ஆதாரங்களுடன் பதிவு செய்து விட்டேன் வர்ணம் என்பது ஒவ்வொரு குடிக்கும் உள்ளேதான் பிரிக்கப்பட்டிருந்தது வெளியே இல்லை என்று

இனியும் புரியவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது

நமக்கு சமமான புரிதல் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் கூறுவது புரியும் மற்றவர்களுக்கு என்னுடைய பதிவு வெறும் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே

இன்று பிராமணர்கள் என்று அறியப்படும் அனைவரும் ஓரே மரபு வழி வந்தவர்கள் கிடையாது



எஜமான்


எஜமான்

இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது முதலாளி என்று

ஆனால் அது தவறு எஜமான் என்பது முதலாளியை குறிக்காது

திராவிட கிருமிகள் எஜமான் என்ற பெயரை பணம் படைத்தவர்கள் மற்றும் பெருந்தொழில் நடத்தபவர்கள் ஆகியோருக்கு உரியது என்பது என்று கற்பித்து விட்டது

குரு என்ற பதம் எப்படி ஆதி சைவர்களுக்குரியது என்று ஆகமங்கள் கூறுகிறதாே அதைபோல்

எஜமான் என்ற பதம் வெள்ளாளர்களுக்கு மட்டுமே உரியது

இந்த ஒரு வார்த்தை போதும் வெள்ளாளர்கள் பரம க்ஷத்திரியர்கள் என்பதற்கு

யக்ஞ + மான் = எஜமான்

யக்ஞ என்றால் வேள்விகளை குறிக்கும்

மான் என்றால் தலைவன் என்று பொருள்

அதாவது வேள்விகளுக்கு தலமை தாங்குபவர்களையே எஜமான் என்று அழைக்கவேண்டும்

எவ்வளவு பெரிய பண படைத்தவனாக இருந்தாலும் பெரும் தொழில் அதிபராக இருந்தாலும் அவர்களை எஜமான் என்ற பதம் கொண்டு அழைக்க கூடாது

அவ்வாறு அழைத்தால் அந்த பாவம் யாரை அழைத்தார்களோ அவர்களையே சாரும் இதனால் அவர்கள் தொழில் விருத்தி அடையாது

நாட்டு எஜமான் என்றால் அந்த நாட்டில் நடக்கும் அனைத்து யக்ஞ- னங்களுக்கும் தலைவன் என்ற பெருமைக்குரியவர்கள் மட்டுமில்லை

அதில் நடக்கும் தவறுகளையும் தன் தலையில் தாங்குபவர்கள் என்று பொருள்

இந்த படத்தில் எனது முன்னோன் வணங்காமுடியை எஜமான் என்று சொல்கிறது

இன்றும் எனது நாட்டில் நடக்கும் யக்ஞங்களுக்கு நானே தலைவன்

அதனால்தான் நான் பிறந்ததில் இருந்து மாமிசங்கள் சாப்பிடாமல் ஆச்சாரம் பேணி எனது பாவத்தை போக்க வேண்டியுள்ளது

ஆகையால் மாமிசம் தின்றால்தான் நல்லது என்று எண்ணி என்னிடம் வாதம் செய்தவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

மாமிசம் நல்லது என்று உங்க அறிவியல் சொன்னாலும் எனது முன்னோர் அறிவியல் சாப்பிட கூடாது என்று சொல்லி கொடுக்கிறது

ஆகையால் மற்றவர்கள் சொல்வதை நான் கேட்க வேண்டியது இல்லை

குண ஆச்சாரங்களே காட்டிக்கொடுத்துவிடும் ஒருவர் இன்னார் என்று
 
 

கோபூஜை

பழைய + ஆறை = பழையாறை

ஆறை என்னும் பழையாறை என்று சுந்தரர் தேவாரத்தில் சிறப்பாக போற்றப்பட்ட பழையாறை மாநகரில் இருந்து வந்து கொங்கு நாட்டில் ஆட்சி அமைத்தார்கள் சோழர்கள்

சோழர்கள் வாழும் பகுதிக்கு என்றுமே ஆறை என்றுதான் பெயர் வழங்கும் அதன்படி கொங்கில் ஆறைநாடு என்ற நாட்டை அமைத்து அந்த நாட்டில் திருமுருகன்பூண்டியை தலைநகராக கொண்டு 375 ஆண்டுகள் கொங்குநாட்டை ஆட்சி செய்த சோழர்களின் ராஜகுருவாக விழங்கிய ஆறை நாட்டு ஆச்சாரிய மூர்த்தி

"Sriமத் மார்கண்டேய பண்டித குருசுவாமிகள்" அவர்கள் வரும் அம்மாவாசை அன்று கொங்க கோசாலையில் கோபூஜை செய்யவுள்ளார்

அனைவரும் அவசியம் கலந்துகொண்டு ராஜகுருவின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்



சோழன் யார்

பல லட்சம் ஓலை சுவடிகளை இன்றுவரை வெளியிடாமல் பாதுகாத்து வரும் தஞ்சாவூர் சரஸ்வதி நூலகத்தில் சுவடி வடிவில் இருந்த நிகண்டை அந்த நூலகம் வெளியிட்டுள்ளது

அந்த நூல் சோழனை உழவு தொழிலுக்கு குடிதலைவன் என்று சொல்லுகிறது

அதேபோல் அகராதிகளும் வளவன் என்றால் வேளாளன் என்று பொருள் கூறும்

தொல்காப்பிய நச்சினார்கினியாரும்

சோழதேசத்திற்கு வேள் எனவும் அரசு எனவும் உரிமையேய்திய வேளாளர் ஆகுப என்று கூறுகிறார்

சோழன் பூர்வ பட்டையம் சோழனை காளையை கட்டி உழுது திண்ணும் வெள்ளா பையன் என்று கூறும்

அதே போல் சோழனிடம் சிறப்பு பெற்றிருந்த ஆகமங்களும் அரசனுக்கு முப்பத்திரண்டு உழவு என்று கூறும்

இன்னும் ஆதாரங்களை அடுக்கி கொண்டே போகலாம்

இதனை அறிந்துகொண்ட திராவிட விஷமிகள் சூத்திர வேளாளர்களை தனியாக பிரித்து காட்டாமல்

அனைத்து வேளாளர்களையும் சூத்திரன் ஆக்கிவிட்டது

"சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய" என்பதே ஸாசனம்

எங்க அப்பனை எப்படி கூச்சமே இல்லாம உங்க அப்பன் என்று கூறமுடிகிறது

இந்த புத்தகத்தின் முதல்பக்கத்தை முதல் கமேண்டில் பதிவுசெய்துள்ளேன்



வெள்ளாளரில் இருக்கும் நான்கு வர்ணம்

"சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய"

என்ற ஸ்லோகம் உள்ள வெள்ளாளர்களின் மெய்கீர்த்தி கல்வெட்டுகள் பற்பல சோழர்களின் ஆட்சிகாலத்தில் கிடைக்கும்

அதாவது வெள்ளாளர்கள் நான்கு வர்ணங்களாய் உதித்து சகல உலகையும் காப்பவர்கள் என்று பொருள்

அவ்வாறு நான்கு வர்ணங்களாய் உதித்தவர்களுக்கு வெவ்வேறு ஏர் கலப்பை சொல்லப்படுகிறது

அந்த ஏர்கலப்பை எந்த மரத்தில் செய்ய வேண்டும் என்பது முதற்கொண்டு ஆகமங்களில் பேசப்படுகிறது

சரி வெள்ளார்களை கொண்டாடும் ஆகமங்கள் ஏன் பிரகஸ்பதியை கொண்டாடுவதில்லை

இதற்கான விடை கிடைக்கும்போது தமிழக வரலாற்றில் நிலவும் பல்வேறு குழப்பங்கள் முடிவுக்கு வரும்

படம்: காமிக ஆகமம்




கடந்த 07/07/2015 அன்றைய பதிவில் வெள்ளாளரில் இருக்கும் நான்கு வர்ணங்களை கூறியிருந்தேன் 

பிராமணர்களுக்கு= திரு மேழி
க்ஷத்திரியர்களுக்கு= சித்திர மேழி
வைசியருக்கு= பொன் மேழி
சூத்திரருக்கு= மேழி

என்று பதிவு செய்திருந்தேன் ஆனால் "காமிக" ஆகமத்தின் படி

இறைவனுக்கு பொன் சொல்லப்படுகிறது

பிராமணருக்கும் க்ஷத்திரியருக்கும் வெள்ளியும்

வைசியருக்கும் சூத்திரருக்கும் இரும்பும் சொல்லப்படுகிறது

எனது கருத்து இங்கு முரண்படுகிறது

அத்துடன் இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும்

சோழன் ஆகமங்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய அளவுக்கு சேரனோ பாண்டியனோ பல்லவனோ கொண்டாடமல் போனது ஏன்

பல்லவனிடமும் பாண்டியனிடமும் ஆபஸ்தம்ப சூத்திரமே சிறப்பு பெற்று இருந்தது

சோழன் வெள்ளாளன் என்பதினாலேயே ஆகமங்களை தலையில் வைத்து கொண்டாடியுள்ளான்

ஆகமங்களை படிக்கும் போது அப்பட்டமாக தெரிகிறது

சோழன் யார்

சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று பலதடவை கூறியுள்ளேன்

அதற்கான ஆதாரங்களையும் வரிசையாக அடுக்கியுள்ளேன்

இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஆதாரங்களும் தொடர்ந்து கிடைத்தவாறு உள்ளது

புலிக்கொடி சோழனுக்குரியது என்று அனைவரும் அறிந்ததே

இந்த படத்தில் இருக்கும் கல்வெட்டு முதலி பட்டம் பெற்ற வெள்ளாளரை கூறும் போது புலிக்கொடிக்கு உரியவர்களாக கூறுகிறது

சோழன் வெள்ளாளன் என்பதற்கு மற்றொரு ஆதாரம் இது

இனியும் வரலாற்று திருடர்களின் புரட்டை நம்பிக்கொண்டு இருப்பவர்களின் நிலமைதான் பாவம் 




சோழர் கொங்குநாடு வருகை

மன்னியூர் / அன்னூர்

இந்த ஊர் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அன்னூர் தாலுக்காவின் தலமையிடம்

கல்வெட்டுகள் இந்த ஊரை மன்னியூரான மேற்தலை தஞ்சாவூர் என்று அழைக்கும்

அதாவது மேற்கு பகுதியின் தஞ்சாவூர் என்று பொருள் அவ்வாறு அழைக்க காரணம் தஞ்சையை போலவே இங்கும் மிகபெரிய இராணுவ பாசறை இருந்தது

இங்குமட்டும் 3,000 படைவீரர்கள் நிரந்திரமாக பணியமர்த்தப்பட்டிந்தனர்

ஆகையால் இவ்வூருக்கு மேற்தலை தஞ்சவூர் என்று பெயர் ஏற்பட்டது

ஆனால் வெறும் ஆயிரம் நபர்களை பெற்று இருந்த இராணுவ பாசறையான "சூரலூரான அரிய பிராட்டி நல்லூர்"(சூலூர், அரசூர் சேர்ந்த பகுதி) கொங்கு நாட்டின் இராணுவ தலமையிடம் என்று கல்வெட்டுக்கள் கூறும்

இன்றும் சூலூரில் இந்திய இராணுவத்தின் பயிற்சி மையம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அன்னூரில் முப்பதற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கிறது

கோவில் விமானம் பழைய சோழர்கால கட்டிடத்திற்கு சான்றாக இன்றும் நீடித்துள்ளது

மேற்படி கல்வெட்டுகள் கூறும் செய்தியை அடுத்த பதிவில் பார்ப்போம்

படம்: கோ-நாட்டான் வீர சோழன்

படத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இருக்கும் கொங்கு சோழர் வருகையை சித்தரிக்கும் புடைப்பு சிற்பம் ஆகும்

இங்கிருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டரில் இருக்கும் ஆலத்தூரில் உள்ள சமண பள்ளியில் கொங்கு சோழனின் முதல் கல்வெட்டு கிடைக்கும்

கிபி 930 ஆம் ஆண்டை சேர்ந்த அதில்தான் கோ நாட்டான் வீர சோழன் பெயர் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்

வீர சோழன்
விக்கிரம சோழன்
என்பது கொங்கு சோழர்கள் மாறி மாறி புனைந்து கொள்ளும் பட்டம் ஆகும்

சரி அது என்ன கோ நாட்டார் என்பது பலருக்கு புரிவதில்லை

நாட்டார் என்பது வெள்ளாளரில் இருக்கும் ஒரு பிரிவு

கோ என்றால் தலைவன் என்று பொருள் அதாவது நாட்டார்களின் தலைவன் என்பதன் இலக்கண சொல்தான் கோ நாட்டான் என்பது

நாட்டார்கள் பற்றி எனது பழைய பதிவுகளில் காண்க

தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம்



கொங்கர் கோன்

மக்களாட்சி நடைபெற்றுகொண்டு இருக்கும் இந்தியாவில் திடிரென மன்னராட்சி ஏற்படுகிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்

உடனே அந்த அரசு 100, 500, 1000, என்று ஏற்கனவே இருந்த பணங்களுக்கு புதிதாக பெயர் சூட்டி இனி அந்தபெயரிலேயே மக்கள் அழைக்கவேண்டும் என்று ஆணையிடுகிறது

அதில்
100 க்கு கலாம் பணம் என்றும்
500 க்கு காந்தி பணம் என்று பெயர் சூட்டுகிறது

அப்ப உயர்மதிப்பு கொண்ட பணமான 1000 க்கு என்ன பெயர் சூட்டும்

மற்றஇருவரை விட அதிகம் செல்வாக்கு பெற்ற ஒருவரின் பெயரைத்தான் சூட்ட முடியும்

சும்மா ரோட்டில் செல்பவர்கள் பெயரை எல்லாம் சூட்ட மாட்டார்கள் அல்லவா

மூவேந்தர் ஆட்சிகாலத்தில்

மாடை
வராகன்
கழஞ்சு

இது போன்ற பல பணங்கள் நடைமுறையில் இருந்தது ஆனால் அனைத்திற்கும் உயர்ந்தது கழஞ்சு என்ற பணம் மட்டுமே

கழஞ்சுக்கு மேற்பட்ட பணம் தமிழ்நாட்டில் இல்லை

இதிலிருந்து கழஞ்சு என்ற பெயர் ஏதோ ஒருவகையில் சிறப்புபெற்று இருந்ததை அறியலாம்

படம்: கீரனூர் கல்வெட்டு(பழனி)

"வெள்ளாள கழஞ்சியரில் தேவனான கொங்கிளங்கோன்" என்று சோழர்கால கல்வெட்டு கூறுகிறது

இதில்

கழஞ்சியர் என்பது கோத்திரம்

கொங்கிளங்கோன் என்பது அவர்கள் என்ன அதிகாரத்திற்குரியவர்கள் என்பதை உணர்த்தும்

கொங்கு + இளம் + கோன் = கொங்கிளங்கோன்

கொங்கு நாட்டிற்கு இளவரசன் என்று பொருள்

அதாவது இவர்கள் கொங்குநாட்டின் ஆட்சியாளர் என்பது தெளிவு

இந்த ஆட்சியாளரின் கோத்திர பெயரை தமிழகத்தின் உயர்ந்த பணத்திற்கு பெயராக சூட்டியிருந்தார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்

ஆனால் தற்பொழுது இவர்கள் இருப்பது கூடா யாருக்கும் தெரியவில்லை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நந்தவனப்பாளையம் என்ற பகுதியை சுற்றி வாழ்ந்துவருகிறார்கள்



சோழன் யார்

சோழர் யார் என்று 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “வாலசுந்தர கவிராயர்” தனது பாடலில் தெளிவாக கூறிசென்றுள்ளார். ஆனால் அதற்கு உரை எழுதியவர்களுக்கும் அதை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கும் இது தெளிவாக தெரிந்திருந்தும் மழுப்பாலான உரையை வெளியிட்டுள்ளார்கள் . இந்த பாடலில் பால வெள்ளாளரில் பைதலை கோத்திரத்தார்தான் “சோழ அரசர்கள்” என்று தெளிவாக கூறுகிறது. அதில் “வம்புறு கண்டன்” என்று அவரை கூறுகிறது. வம்புறு என்றால் புதிய என்று பொருள் அதாவது கொங்கு நாட்டிற்கு புதியதாக வந்த கண்டன் என்று கூறுகிறது.

மேலை சாளுக்கியன் பட்டமேற்றவுடன் ப்ழையாறையில் இருந்த அரச குலத்தவர்கள் ஒட்டுமொத்தமாக கொங்கு நாடு குடியேறிவிட்டார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறி வாழ்ந்து வரும் பகுதிற்கு ஆறை நாடு என்று பெயர் ஏற்பட்டது. இவர்கள் ஆறை எனும் பழையாறை பகுதியில் இருந்து கொங்கு நாட்டிற்கு புதிதாக குடியேறும் போது அவர்களுடன் சோழபேரரசின் 79 வளநாட்டார்களும்(கொங்கு வெள்ளாளர்) கொங்குநாடு குடியேறி விட்டதாக மெக்கன்சி ஆவணங்கள் கூறும்.

http://kongupattakarars.blogspot.in/2011/03/5.html

அதேபோல் பதிணென் வேளிர்களின் தலைவரான பிள்ளந்தை கோத்திரத்து மசக்காளி மன்றாடியாரும்(பால வெள்ளாளர்) திருத்தவதுறையில்(லால்குடி) இருந்து கொங்கு நாடு குடியேறியதாக மசக்காளி மன்றாடியார் பட்டையம் கூறும்.

காங்கயம் செங்கண்ணன் கோத்திரத்து பல்லவராயரும் சோழன் ஆட்சிகாலத்தில் ராஜகம்பீர வள நாட்டு(திருச்சி சுற்று பகுதி) நாட்டாரக இருந்ததாகவும் சோழ விழ்ச்சிக்கு பிறகு கொங்குநாடு குடியேறிவிட்டதாக பல்லவராயர் கைபீது கூறும்.

இவர்கள்(சோழர்) ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு இவர்களை “வீர விக்கிரம கரிகால சோழியாண்டான்” என்று அனைத்து கல்வெட்டுக்கள், பட்டையங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை கூறுகின்றது.

அதாவது ”சோழியாண்டான்” என்றால் சோழனாக ஆண்டவன் என்று பொருள். இவ்வாறு கூறும் ஆவணங்கள் பற்பல. அவினாசி கோவில் கல்வெட்டு ஒன்று இவரை கூறும் போது “ஆண்ட மக்கள் சேவூர் கவுண்டர்கள் சோழியாண்டார் சூரிய தேவன்” என்று கூறும். அந்த கல்வெட்டை அவினாசி பெரிய கோவிலில் இன்று காணலாம். இவர்கள் சூரிய வம்சம் என்பதால் “சூரிய தேவன்” என்று கூறப்படுகிறது.

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=191

கங்கையும் கடாரமும் கொண்டு விளங்கிய ஒட்டு மொத்த சோழ பேரரசும் கொங்குநாட்டில் ஐக்கியம் ஆகி 800 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்றைய் வரலாற்று ஆய்வாளர்கள் சோழனை சிதம்பரம் பக்கமும், தஞ்சாவூர் பக்கமும் தேடிக்கொண்டு இருப்பதுதான் வேடிக்கை, நகைச்சுவையின் உச்சகட்டம் என்று கூட கூறலாம்.

எனது பழைய பதிவுகளில் சோழன் சுத்தமான வெள்ளாளன் என்பதற்கும் யார் உண்மையான க்ஷத்திரியர்கள் என்பதற்கும் பல ஆதாரங்களை அடிக்கியுள்ளேன்.



சோழன் யார்

ஒரே கேள்வி:

சித்திரமேழி(ஏர்கலப்பை) சபை ஏன் சோழர்களின் ஆட்சி காலத்தில் மட்டும் சிறப்பு பெற்று விழங்கியது?

பாண்டியரின் ஆட்சி காலத்திலோ பல்லவரின் ஆட்சிகாலத்திலோ சித்திரமேழி சபை சிறப்பு பெற்றிருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

சோழபேரரசு கட்டமைக்கப்பட்ட காலத்தின் தொடக்கத்தில் இருந்து சோழப்பேரரசு விழ்ச்சி அடையும் வரை தொடர்ந்து சித்திரமேழி சபையின் மெய்கீர்த்தி தென்யிந்தியா முழுவதும் பரவலாக கிடைக்கும். ஆனால் சோழ வீழ்ச்சிக்கு பிறகு சித்திர மேழி சபையும் வீழ்ச்சி அடைந்துவிடும். அந்த மெய்கீர்த்தியை கிழே இருக்கும் லிங்கில் சென்று பார்கவும்.

அதேபோல் யார் உண்மையான் க்ஷத்திரியர்கள் என்று நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன் அதனுடைய லிங்கும் கிழே:

https://www.facebook.com/photo.php?fbid=1169463253080647&set=pb.100000509507105.-2207520000.1442239895.&type=3&theater

அதேபோல் பல முறை அழுத்தம் திருத்தமாக சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று நான் கூறியுள்ளேன். அதற்கான ஆதாரங்களையும் நான் வரிசையாக அடிக்கியவண்ணம் உள்ளேன்.

இந்த படத்தில் இருக்கும் பாடல் புறநானுறு 58- இதில் புலவர் சோழன் மற்றும் பாண்டியனை பற்றி மாறி மாறி சொல்லியவண்ணம் பாடியுள்ளார். அவ்வாறு பாடும் புலவர் சோழனை பற்றி கூறும் போது எப்பொழுதுமே மேழியை தன் கையில் வைத்திருக்கும் பலராமனை சோழனாக கூறுகிறார். கிருஷ்ணரை பாண்டியனாக கூறுகிறார்.

சோழன் மேழிக்குரியவன் என்பதால் இங்கு மேழிக்குரிய பலராமனும் சோழனுக்கு ஒப்பாக கூறப்படுகிறான்.

இன்னும் பல ஆதாரங்கள் உள்ளது தொகுப்பை விரைவில் வெளியிடுகிறேன்.



சோழன் யார்


சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று பல முறை ஆதரங்களை மேற்கோள் காட்டி பதிவு செய்திருந்தேன். (எனது பழைய பதிவுகளை காண்க)

அவற்றிக்கு வலுசேர்க்கும் விதமாக 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நச்சினார்கினியாரோ சோழதேசத்தில் “வேள்” எனவும் “அரசு” எனவும் உரிமை ஏய்திதவர்கள் என்றும். பாண்டிய தேசத்தில் “காவிதி” அதாவது நிர்வாக அதிகாரிகளாகவும் விளங்கியவர்கள் வேளாளர்கள் என்று தொல்காப்பிய உரையில் தெளிவாக கூறியுள்ளார்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் ஒன்றும் உள்ளது. சோழ தேசத்தில் “அரசு” என உரிமை ஏய்தியவர்கள் என்று கூறூம் நச்சினார்கினியார் ஏன் பாண்டிய தேசத்திற்கு அரசு உரிமை பெற்றவர்களாக வேளாளர்களை கூறவில்லை.

அதேபோல் சோழனிடம் “போதாயான” சூத்திரம் சிறப்பு பெற்றிருந்தது ஆனால் பாண்டியர்களிடமும், பல்லவர்களிடமும் “ஆபாஸ்தம்ப” சூத்திரமே சிறப்பு பெற்றிருந்தது என்பதை கவனத்தில் கொண்டு நோக்கினால் ஏன் பாண்டிய தேசத்தில் வேளாளர்கள் அரசு உரிமை பெறவில்லை என்பது புலப்படும்.

குறிப்பு: உலகிற்கு முதன்முதலில் விவசாயத்தை கற்றுகொடுத்தவர் போதாயனர்.

அதேபோல் மற்றொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும் நம்மை சுற்றி ஆயிரம் பெண்கள் இருந்தாலும் நமது இரத்த சொந்தங்கள் மட்டுமே நமக்கு பெண் கொடுக்கும் உரிமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள். மற்றவர்கள் பெண்களை மணந்தாலும் அவர்கள் நமக்கும் பெண்கொடுக்கும் உரிமை பெற இயலாது.

ஆனால் வேளாளர்கள் முடியுடை வேந்தர்களுக்கு மகட்கொடைக்குரியவர்கள் என்று நச்சினார்கினியார் கூறுகிறார். அதாவது பெருவேந்தர்களுக்கு பெண்கொடுக்கும் உரிமை ஏய்தியவர்கள் என்று கூறுகிறார். ஆக உரிமை பெற்றவர்கள் என்றாலே, அவர்கள் இரத்த சொந்தமாக இருந்திருந்தால் மட்டுமே பெண்கொடுக்கும் உரிமை ஏய்த முடியும். மற்ற இனத்தினர் பெருவேந்தர்களுக்கு பெண் கொடுத்திருந்தாலும் அவர்கள் பெண்கொடுக்கு உரிமை ஏய்தியவர்களாக எங்குமே கூறப்படவில்லை.

ஆக பெருவேந்தர்களின் இரத்த சொந்தங்கள் யார் என்பதற்கு இது தெளிவான ஆதாரம்.
 
 

கஞ்சபள்ளி, அன்னூர்

அவினாசியில் இருந்து அன்னூர் செல்லும் ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில்

அவினாசியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அன்னூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் ஊர்தான் இந்தபடத்தில் இருக்கும்

"கங்கைப்பள்ளி"

இன்று இந்த ஊரின் பெயர் கஞ்சப்பள்ளி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது

கங்கை என்ற சொல் கஞ்ச என்று மருவியுள்ளது

அதேபோல் பள்ளி என்பது சமணர்கள் அதிகம் வாழும் பகுதியை குறிக்கும் சொல் ஆகும்

இதே சொல் கன்னடத்தில் ஹள்ளி என்று அழைக்கப்படும்
இன்றும் கர்நாடகாவில் ஹள்ளி என்ற பெயர் தாங்கிய ஊர்களை அதிகம் காணமுடியும்



செங்கல் பட்டு

** "செங்கல்பட்டு" **

இந்த ஊர் சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது

இதற்கு ஏன் அப்படி பெயர் வந்தது என்று பார்ப்போம்

தனிஒருவன் என்ற சினிமாவில் தம்பிராமையாவின் பெயர்

** "செங்கல்ராயன்" **

அது என்ன செங்கல்ராயன் அப்படி ஏன் பெயர் வைத்தார்கள்

சங்க காலம் தொட்டே நமது பாரம்பரியத்தில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது

உதாரணம்
சோழனுக்கு உரியது ஆத்தி பூ(ஆர்)

பாண்டியனுக்குரியது வேப்பம் பூ

சேரனுக்குரியது பனம்பூ

ஆகையால் இலக்கியங்கள் இவர்களை

ஆர்தார்கோன்
வேம்பின்கண்ணிக்கோன்
போந்தின்கண்ணிக்கோன்

என்று அழைக்கும்

கோன் என்பதை போலதான் ராயர் என்றாலும் அரசன் என்று பொருள்படும்
இங்கு செங்கல் என்பது திரிபு அதன்சரியான பெயர்

**"செங்கழு"**

அதாவது செங்கழுநீர் என்பது குவளை மலரை குறிக்கும் மலர்.

இந்த மலர் வேளாளர் என்ற சமூத்திற்கு உரியது என்று வேளாளர்களின் பட்டையங்கள் கூறும்

அதாவது செங்கழுநீர் மாலையை அணியும் சமூகத்தின் தலைவனை(ராயன்)
** "செங்கழுராயன்" **
என்று அழைப்பார்கள் அதுவே காலப்போக்கில் செங்கல்ராயன் என்று மாறிவிட்டது

அதேபோலதான் பட்டு என்பது பற்று என்பதின் திரிபு

பற்று என்றால் பற்றிக்கொண்டது என்று பொருள்

அதாவது செங்கழுநீர் பூவை மாலையாக அணிபவர்கள் பற்றிக்கொண்ட ஊர் என்பதால் அவ்வூருக்கு

** "செங்கழுநீர் பற்று" **

என்று பெயர் ஏற்பட்டது அதுவே காலப்போக்கில் செங்கல்பட்டு என்று மருவியுள்ளது

ஆரியன் யார்

வேதத்தை பொறுத்தவரை பெருமாள்தான் புருஷன்(க்ஷத்திரியன்) அதாவது ஆட்சியாளன்

ஆகமத்தை பொறுத்தவரை முருகன்தான் புருஷன்(க்ஷத்திரியன்) அதாவது ஆட்சியாளன்

முருகன் சேயோன் அதாவது சிவப்பு நிறக்கடவுள்

சேயோன் என்றால் சிவந்தவன் என்று பொருள்

பெருமாள் மாயோன் அதாவது கருப்பு நிற கடவுள்(கண்ணன்)

அப்ப உங்க கூற்றுப்படி பார்த்தால் சிவப்பாக இருப்பவன்தானே ஆரிய கடவுளாக இருக்க வேண்டும் அவன் எப்படி தமிழ் கடவுள் ஆனான்

சிவப்பாக இருக்கும் ஒருவனை தமிழன் என்று கூறிவிட்டு கருப்பாக இருப்பவனை எப்படி ஆரியன் என்று கூறமுடிகிறது

பின்குறிப்பு: காங்கேயன் என்பது முருகனின் பெயர் அதாவது கங்கையின் மைந்தன் என்று பொருள் (சோழன் ஆகமத்திற்குரியவன்) (பாண்டியன் வேதத்திற்குமுரியவன்)

இரண்டிலுமே சிவன் மட்டுமே தெய்வம்

இதெல்லாம் உங்களுக்கு புரியவைக்க முடியாது காரணம் என்னதான் தகிடம் தித்தாம் போட்டாலும் பிரமணார்கள் அளவுக்கு உங்களுக்கு அறிவில்லை என்பதுவே நிதர்சனம்

ஜாதிக்குள்ளே வர்ணமா
இல்லை வர்ணத்திற்குள்ளே ஜாதியா என்பதை படித்துவிட்டு வாங்க முதலில்

மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்த கதையா நாட்டை குட்டிசுவர் ஆக்காதீங்க

ஆறை நாடும் பால வேளாளரும் நூல்வெளியீட்டு

பழையாறை எனும் ஆறை

சோழ குலத்தினர் எங்கு சென்றாலும் தங்கள் வாழ்விடத்தை ஆறை என்று பெயரில்தான் அமைத்துக்கொள்வார்கள்

இதை சங்ககாலம் தொட்டு காண இயலும்

மேலை சாளுக்கியன் பதவியேற்றவுடன் ஒட்டுமொத்த சோழ குலங்களும் கொங்கு நாடு குடியேறி தங்கள் வாழ்விடமாக ஆறை என்ற பெயரில் நாடு அமைத்துக்கொண்டார்கள்

அந்த ஆறை நாட்டை பற்றி திரு.வெங்கடசாமி ஐயா அவர்கள் எழுதிய "கொங்கில் ஆறை நாடும் பால வெள்ளாளரும்" என்ற நூலை

"ஆறை நாட்டு ஆச்சாரிய மூர்த்தி சோழர்களின் குலகுரு திருமுருகன்பூண்டி மருதமலை ஆதினம் காசிப கோத்திரத்து ஸ்ரீமத் மார்கண்டயே பண்டித குரு சுவாமிகள்" அவர்களின் திருக்கரங்களால் பெற்றகொண்ட தருணம் எனது வாழ்நாளில் மறக்க முடியாது தருணம் ஆகும்

உடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற புலவர் ராசு ஐயா அவர்கள் (இடது)

இன்றை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வடக்கு பகுதியே ஆறை நாடு ஆகும்

இதன் கிழக்கு எல்லை செங்கப்பள்ளி ஊர் தவிர்த்து காட்டு கன்னிமார் கோவிலும்

மேற்கு எல்லை வெள்ளியங்கிரி மலையும்

தெற்கு எல்லை நொய்யல் ஆறும்

வடக்கு எல்லை பவானி ஆறும்

என நூறு கிலோ மீட்டர் நீளமும் அறுபது கிலோமீட்டர் அகலமும் கொண்ட பகுதியாகும்

மேலும் ஆறை நாடு பற்றிய விவரங்களுக்கு : http://kongupattakarars.blogspot.in/2011/03/5.html?m=1


நான்கு வர்ணம்

சோழர் காலத்தில் வெள்ளாருக்கு தென் இந்தியா முழுவதும் மெய்கீர்த்தி கிடைக்கும் போது ஆண்டா ஜாதி என்று சொல்லும் எந்த ஜாதிக்கும் மெய்கீர்த்தி ஏன் இல்லாமல் போனது

உடனே அரசர்களின் மெய்கீர்த்தியை கூறவேண்டாம்

ஒருவன்தான் அரசன் ஆக முடியும் ஒட்டுமொத்த ஜாதிக்காரனும் அரசன் ஆகாமுடியாது

அரசன் போக மிச்சமிருக்கும் ஜாதிக்காரன்கள் என்ன ஆனார்கள்

அவர்கள் பங்களிப்பு சோழராட்சியில் இருந்திருந்தால் அவர்களுக்கு என்று மெய்கீர்த்தி எங்கே?

ஏன் வெள்ளாருக்கு மட்டும் மெய்க்கீர்த்தி கிடைக்கிறது

வெள்ளாளரை சூத்திரன் என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறும் முரளி வன்னியர் அவர்களே

நீங்கள் காட்டும் ஆதாரங்களில் சூத்திர வேளாளர்களை மட்டும் மேற்கோள் காட்டுவது ஏன்

சேக்கிழார் தன்னை சூத்திரர் என்று சொல்வதை ஏற்கும் நீங்க அதே சேக்கிழார் "வேளாளர் ஏயர்கோன் கலிக்காமரை" சோழனின் படைத்தளபதி என்று கூறுவதை ஏன் சுட்டிக்காட்டுவதில்லை

நிகண்டுகளில் சூத்திரன் என்று வருவதை மட்டும் சுட்டிக்காட்டும் நீங்கள் ஏன் "பூவைசியர்" என்று அதேநிகண்டுகள் கூறுவதை சுட்டிக்காட்டுவதில்லை

தொல்காப்பியத்தில் சூத்திரர் என்று கூறும்பகுதியை சுட்டிக்காட்டும் நீங்கள் ஏன் மன்னர் பாங்கின் பின்னோர் என்ற வாரியை சுட்டிக்காட்டுவதில்லை

சோழதேசத்தில் "வேள்" எனவும் "அரசு" எனவும் உரிமைஏய்தியவர்கள் வேளாளர்கள் என்று நச்சினார்கினியார் கூறுவதை ஏன் சுட்டிக்காட்டுவதில்லை

சித்திரமேழி பட்டன்
சித்திரமேழி நாட்டார்
பூவைசியர்
சூத்திரர்

என்ற நான்கு வர்ணமும் வெள்ளாளரில் உள்ளது இந்த நான்கையும் சுட்டிக்காட்டாமல் சூத்திரன் என்று கூறுவதை மட்டும சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இல்லை

இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்

மற்ற ஜாதிகளுடன் இனக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளாளர்கள்

ஒருசிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயங்களும் அடித்துக்கொள்ளும் நிலமை வேண்டாம் என்று நினைக்கிறேன்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

மூல பலம்

மூலபல-வதை படலம் என்று ராமாயண யுத்த காண்டத்தில் ஒரு படலமே வைக்கப்பட்டிருக்கும்

இந்த மூலபலத்தை பற்றி கம்பர் மிக அருமையாக வர்ணித்திருப்பார்.
மூலபலம் என்றால் என்ன?

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு ராஜராஜனின் படை"கொங்கவாள் எழுநூற்றுவர்" என்று கூறும்

திருவிடை மருதூர் கல்வெட்டில் மூலபலத்தினர் சதூர்வேதி மங்கலத்து பிராமணர்களை நீருக்குள் நிறுத்தி தண்டித்ததாக வரும்

நிற்க அதென்ன அரசனுக்கே பிராமணர்களை தண்டிக்கும் உரிமை இல்லாத போது இவர்கள் எப்படி தண்டித்தார்கள் என்று கேட்டகலாம்

இப்ப புரிகிறதா மூலபல படைபிரிவின் அதிகாரம் என்னவென்று
அரசர்கள் பல்வேறு படைபிரிவுகளை வைத்திருந்தாலும் மூலபல படைப்பிரிவு மட்டும் என்றுமே தனது ரத்த சொந்தங்களை மட்டுந்தான் வைத்திருப்பார்கள்

மூலபலம் என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது

இந்த மூலபலத்தை வதைத்தால்தான் போரில் வெற்றி சாத்தியம்

கம்பர் காலத்தில் ராமாயணத்தில் மூலபல வதைபடலம் என்றே ஒருபடலம் தனியாக வைக்கும் அளவிற்கு இவர்கள் செல்வாக்கு இருந்துள்ளது
சரி அதுக்கென்ன இப்ப என்று கேட்கலாம்

சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று பலமுறை பதிவு செய்திருப்பேன் அதற்கு இந்த ஆதாரம் மிகவும் வலு சேர்க்கிறது

இரத்த சொந்தங்களை மட்டுமே படையில் சேர்க்க முடியும் என்ற போது அந்தபடையின் தலைவன் அரசனுக்கு எவ்வளவு நெருக்கமான சொந்தமாக இருந்திருக்க வேண்டும்

இந்த படத்தில் இருக்கும் கல்வெட்டை படியுங்கள்
கோதைமங்கலமான மடிகட்டளத்திலிருக்கும்(ராணுவ பாசறையில்) வெள்ளாளன் வீர நாரயணன் "மூலபல படை வளவன்" செம்பியன் காமிண்டன் - ARE 1905 S.No:711

என்ற வரியின் மூலம் வெள்ளாளன்தான் மூலபல படையின் வளவன் என்பதை அறியமுடிகிறது

செம்பியன் என்றால் சோழன்,
கா என்றால் காத்தல்,
மிண்டன் என்றால் வீரன் என்று பொருள்.

கல்வெட்டில் செம்பியன் காமிண்டன் என்று வருவதையும் கவனத்தில் கொள்க.

இது மிக மிக முக்கியமான சான்று
இதன் அருகே இருக்கும் மற்றொரு கல்வெட்டில்
மூலபல கொற்றவாள் எழுநூற்றுவன் என்ற கல்வெட்டு கிடைக்கும்

எழுநூற்றுவன் மன்றாடி என்பவர் நம்ம கன்னந்தை கூட்டந்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு

யார் உண்மையான க்ஷத்திரியர்கள் என்ற எனது பழைய பதிவையும் சேர்த்து படியுங்கள் எனது பதிவின் ஆழம் புரியும்


பார்கவனை காப்பாற்றிய தொரவலூர் செல்லன்

பார்கவனை காப்பாற்றிய தொரவலூர் செல்லன்.

பார்கவன் வருவான் முன்னே பகலவன் வருவான் பின்னே

பார்கவன் - வெள்ளி
பகலவன் - சூரியன் 


விடி-வெள்ளி அடிவானத்திற்கு வந்த பிறகே சூரியன் உதயமாவான்
அதுபோலத்தான் சூரிய குல க்ஷத்திரியர்களுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கும் உரிமை பார்கவ குல க்ஷத்திரியர்களுக்கு மட்டுமே உரியது

பட்டாபிஷேகம் செய்து வைக்கும் இவர்கள் வசிக்கும் ஊருக்கு பெயரும் கூட பட்டம்-பாளையம் என்றே வழங்கப்படுகிறது

இவர்கள் சோழ தேசம் விட்டு கொங்கு தேசம் குடியேறி தொரவலூரில் காணி அமைத்து அபிஷேபுரம் என்று ஊர் கட்டி அபிஷேக கவுண்டர்கள் என்ற சிறப்புடன் வாழ்ந்துவந்தார்கள்

"தொரவலூர் மட்டார் குலழாள் மதரூபன் பட்டாபிஷேக பெருமாள்"
சந்திர வம்சத்து வேட்டுவர்கள் இவர்கள் மீது படையெடுக்கும் போது இவர்களை காப்பாற்றியவர்கள் செல்லங்கூட்டத்தினர்

இதற்கு கைமாறாக தொரவலூர் காணியை செல்லங்கூட்டத்திற்கு எழுதி வைத்துவிட்டு இவர்கள் தொரவலூர் விட்டு பட்டம்பாளையம் குடியேறிவிட்டார்கள்

புலவர் ராசு தொகுத்த கொங்கு வேளாளர் செப்பேடுகளில் செல்லங்கூட்டத்தாரின் மரபிடுங்கி பட்டக்காரர் செப்பேட்டை பதிப்பித்துள்ளார்

சாங்கியத்திற்கு வை

சாங்கியத்திக்கு வை என்ற சொல் வழக்கு கொங்கு நாடு முழுவதும் பரவலாக காணப்படும் சொல்.

சாங்கியங்களின் கூட்டே சடங்கு என்பது

சடங்கு - சட் + அங்கம்

சட் என்றால் ஆறு என்று பொருள்

ஆறு அங்கங்களை கொண்டது வேதம் மட்டுமே

ஆக கொங்கு நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் வேதத்தின் தாக்கம் எவ்வளவு இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது

சாஸ்தா, சாஸ்திரி

அந்தணர் நூற்கும் அறத்திற்கு ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (திருக்குறள் - 543)

இந்த திருக்குறளை பலர் மனம்போன போக்கில் எழுதுகிறார்கள்
அந்தணர் நூற்கும் நூல் எது.

இங்கு நூல் என்பது புத்தகத்தை குறிக்கிறது மாறாக பிராமணர்களின் பூநூலை குறிக்கவில்லை

அதாவது அந்தணர்கள் எழுதும் அறங்களுக்கு
காரணமாய் இருப்பது மன்னவனின் செங்கோல்.
அதாவது அறங்களுக்கு தலைவன் என்றுமே அரசனே.

இது தமிழில்

//////////////////////////////
///////////////////////////////

அதே சமஸ்கிருதத்தில்

சாஸ்திரம் + திரித்தல்(நூற்கும்) = சாஸ்திரி

அதாவது சாஸ்திரங்களை எழுதுபவர் சாஸ்திரி உடனே பிராமண ஆதிக்கம் என்று குதிக்க வேண்டாம்.

அவ்வாறு சாஸ்திரிகளை எழுத பணிப்பதே அரசந்தான், ஆகையால் அனைத்து சாஸ்திரங்களுக்கு தலைமை தாங்குபவன் என்றுமே அரசன் மட்டுமே.

சாஸ்திர + தலைவன் = சாஸ்தா

இதைத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் இரண்டே வரியில் முடித்துக்கொண்டார். எனக்கு இவ்வளவு வரி வந்துவிட்டது.

/////////////////////////

நீங்க சொல்லுவதெல்லாம் சரி அந்த இந்த முறை தமிழ்நாட்டில் இருந்ததா என்று கேட்பீர்கள்.

கட்டாயம் இருந்தது தமிழ் பிராமி எழுத்து காலத்திலேயே இதை காணலம்.

சாஸ்தா என்பதன் தமிழ் வடிவம்தான் “சாத்தன்” ஏன்பது
இந்த சாத்தன் என்ற பெயர் பல தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.

உதாரணம் “வண்ணக்கன் தேவன் சாத்தன்”

அதேபோல் குன்னத்தூர் ஆதியூரில் கிடைக்கும் கல்வெட்டில் சாத்தாண்டன் என்று குண்டத்திலிருந்து எழுந்த குண்டெலி கோத்திரத்தை சேர்ந்தவன் அழைக்கப்படுவான்.

சாத்தன் + ஆண்டான் = சாத்தாண்டான் /// அதாவது சாஸ்தாவாக ஆண்டவன் என்று பொருள்.

அதேபோல்
சாத்தன் + தந்தை = சாத்தந்தை என்று கோத்திரமும் வழக்கில் இருப்பதை கவனிக்கதக்கது.

இதுபற்றியெல்லாம் எந்த யோசனையும் செய்யாமல் மனம்போன போக்கில் உரை எழுதியுள்ளார்கள்.

எப்பத்தான் உண்மையான வரலாற்று எழுதபோறங்களோ !!!!!!