Wednesday 19 February 2014

ஆரிய திராவிட புரட்டு

ஆரியன் என்பது இனம் அல்ல.,., அறிவில் சிறந்து அறவழியில் நடக்கும் அனைவரையும் ஆரியன் என்றே அழைத்தார்கள் புலவர்கள்.,.,

”பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே”
என்பது மாணிக்கவாசகர் கூற்று.,.,

இப்படி மாணிக்கவாசகர் பாடியதால் அவர் தமிழர் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஒரு கும்பல் இன்நேரம் புறப்பட்டு இருக்கும்.,.,.,

அதேபோல் திராவிடம் என்பது இனம் அல்ல.,,.,
திரவம் + இடம் = திராவிடம் அதாவது நீரால் சூழப்பட்ட பகுதி(தீபகற்பம்) என்று பொருள்.,.,


தொல்காப்பியர் தொடக்கம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஒன்று கூட ஆரியரை ஒரு இனம் என்றோ, சமஸ்கிருதத்தை வேற்றின மொழி என்றோ ஒரு வரி தானும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய அறிவியல் ஆராய்ச்சி விமர்சன முறையாக மீண்டும் இந்த ஆரியப் படையெடுப்பு அல்லது குடியேற்றக் கொள்கையை அலசி ஆராய்ந்து டேவிட் ஃபுரோலி (David Frawley, the author of ' The myth of Aryan invasion of India, Co- author of ' Vedic Aryans and the origin of civilization), முனைவர் கொன்ராட் எல்ஸ்ட் (Dr. Koenraad Elst, the author of 'Update on the Aryan invasion debate), மிஷெல் டானினோ (Mishell Danino, the author of ' The invasion that never was), பேராசிரியர் கே. இந்திரபாலா (Dr. K. Indrapala, the author of " The evolution of an ethnic identity- the Tamils of Srilanka cC. 300 BCE to C. 1200 BCE) போன்ற பல வரலாற்று ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் விரிவாக எழுதியிருக்கின்றார்கள். இவர்கள் ஆரியப்படையெடுப்பு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்களின் அனுமானமான ஒரு கற்பனைவாதம் என்றும் அதற்கு எந்தவிதமான தொல்லியல், மானுடவியல், வரலாற்று ஆதாரங்களும் இல்லையென்றும் தெள்ளத்தெளிவாக நிரூபித்துள்ளனர்.

No comments:

Post a Comment