Thursday 28 April 2016

மூவேந்தர் தோற்றம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நிலவறையில் இருந்து கிடைக்கப்பட்டதுதான்

சோழன் பூர்வ பட்டையம்,

இதை இராமச்சந்திரன் செட்டியார் பதிப்பித்துள்ளார்.

இந்த பட்டையத்தில் மூவேந்தர்கள் தோற்றம் பற்றி கூறப்பட்டிருக்கும்.

அதில் சோழன் வேளாளர்பாடியிலும், சேரன் இடையர்பாடியிலும், பாண்டியன் வலையர் பாடியிலும் பிறந்தார்கள் என்று கூறும்.

அதே பட்டையத்தில் வேறு ஒரு இடத்தில்

சோழனை: காளையை கட்டி உழுது திண்ணும் வெள்ளாப்பையன் என்றும்

சேரனை: ஆடு மேய்த்து திரியும் இடைப்பையலும் என்றும்

பாண்டியனை: வலை வீசி மீன் பிடித்து திண்ணும் வலப்பையனும் என்றும் கூறும்.

இங்கு சேரனையும், பாண்டியனையும் பற்றி எதுவும் கூறாமல் சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று கூறி பல முறை பதிவிட்டிருந்தேன். அதற்கு பல தரவுகளையும் அங்கேயே கொடுத்திருப்பேன்.

இதில் சேரன் அக்னி வம்சம், பாண்டியன் சந்திர வம்சம், சோழன் சூரிய வம்சம் என்பது அனைவரும் அறிந்ததே.

சோழன் மட்டுமில்லை இந்தியாவில் பல சூரிய வம்ச ராஜ்ஜியங்கள் இருந்ததுள்ளது, உதாரணத்திற்கு சீதையின் தந்தை ஜனக மஹாராஜா சூரிய குல க்ஷத்திரியர். அவர் ஏர் பூட்டி உழும் போதுதான் சீதா தேவி ஏர் கலப்பையில் இருந்து கிடைக்கப்பெறுவாள். இதன் அடிப்படையில் சூரிய குல க்ஷத்திரியர்கள் உழவை குலதொழிலாக கொண்டவர்கள் என்று முன்னமே பதிவிட்டிருந்தேன்.

எனது பதிவிற்கு வலு சேர்க்கும் விதமாகவும் சோழன் பூர்வ பட்டையத்தின் வாசகத்திற்கு உயிரூட்டும் விதமாகவும் மேலும் ஒரு ஆதாரத்தை இங்கு பதிவிடுகிறேன்.

அர்த்த சாஸ்திரம் ஏர் பூட்டி உழவு செய்பவனை காசிப மரபில்(சூரிய வம்சத்தில்) வந்தவன் என்று தெளிவாக கூறுகிறது. (படம்: கல்வெட்டு காலாண்டிதழ், தமிழ்நாடு அரசு வெளியீடு)

அதே போல் நமது ஆகமங்களிலும் க்ஷத்திரியர்கள் ஏர்கலப்பைக்குரியவர்களாக கூறுகிறது(பார்க்க பூகர்ஷண விதி). சோழனின் குலகுரு ஆகமங்களுக்குரிய சிவாச்சரியர்கள் என்பது கூடுதல் செய்தி(பார்க்க எசாலம் செப்பேடு).

எந்த காலத்தில் தீக்ஷ்சிதர்கள் சோழர்களுக்கு குலகுருவாக இருந்ததில்லை.

ஆக வட இந்தியாவின் அர்த்த சாஸ்திரமும் சரி, தென்னிந்தியாவின் ஆகமங்களும் சரி, தமிழகத்தின் சோழன் பூர்வ பட்டையமும் சரி, அனைத்தும் ஏர் கலப்பைக்குரியவர்களே சூரிய வம்சம் என்று தெளிவாக கூறுகிறது.

குறிப்பு: ஏர் கலப்பைக்குரியவர்கள் வெள்ளாளர்கள் மட்டுமே என்று அனைத்து நிகண்டுகளுமே கூறும்.

இப்ப புரிகிறதா ஏன் சோழனின் ஆட்சிகாலத்து கல்வெட்டுகளில் வெள்ளார்களுக்கு மட்டும் தென்னிந்தியா முழுவது மெய்கீர்த்தி கிடைக்கிறது என்று.

சூரிய வம்சம் என்ற பெயரில் ஏற்கனவே படம் எடுத்துட்டாங்க. ஏன் நீங்க அக்னி வம்சம் இல்லைனா சந்திர வம்சம் என்று ட்ரை பண்ண கூடாது.



1 comment:

  1. சோழிய வெள்ளாளர்க்கும். வலையர்க்கும் சம்மந்தம் உள்ளதா?

    ReplyDelete