Thursday, 28 April 2016

சோழனும், பாண்டியனும்

வெள்ளச்சாமி
கருப்புச்சாமி

இங்கு கருப்புச்சாமி என்றவுடன் பலர் கருப்புராயன் என்று நினைக்கிறார்கள் அது அடிப்படையில் தவறு.

கரு-வண்ணன் என்பதன் மரூவு கண்ணன் என்பது. அதாவது கருப்பு நிறத்தில் இருப்பவன் கிருஷ்ணன், அதனால் அவனை கருப்புசாமி என்று அழைப்பார்கள்.

வெள்ளை நிறத்தில் இருப்பவன் பலராமன் அதனால் அவனை வெள்ளச்சாமி என்று அழைப்பார்கள். வெள்ளகோவில் என்பதும் பலராமன் கோவிலாக இருக்கலாம். காரணம் சங்ககால பாடல்களில் சிவனுக்கு அடுத்தவனாகவும், பெருமாளுக்கும் முருகனுக்கும் மேற்பட்டவனாகவும் பலராமன் கூறப்படுகிறான்

புறநானூறு பாடல் ஒன்றில் சோழனை உழவுக்குரிய பலராமனாகவும். பாண்டியனை மேய்ச்சலுக்குரிய கிருஷ்ணனாகவும் கூறி பாடப்பட்டிருக்கும்.

இன்றும் ஜல்லிக்கட்டி பாண்டியதேசத்தில் சிறப்புற்றிருக்கும் அளவுக்கு சோழதேசத்தில் சிறப்பு பெறவில்லை என்பது கவனிக்கதக்கது.

பாடல்:
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
நீல் நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, (காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடல் புறநானூறு 58)



No comments:

Post a Comment