Thursday 28 April 2016

சோழர் கொங்குநாடு வருகை

மன்னியூர் / அன்னூர்

இந்த ஊர் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அன்னூர் தாலுக்காவின் தலமையிடம்

கல்வெட்டுகள் இந்த ஊரை மன்னியூரான மேற்தலை தஞ்சாவூர் என்று அழைக்கும்

அதாவது மேற்கு பகுதியின் தஞ்சாவூர் என்று பொருள் அவ்வாறு அழைக்க காரணம் தஞ்சையை போலவே இங்கும் மிகபெரிய இராணுவ பாசறை இருந்தது

இங்குமட்டும் 3,000 படைவீரர்கள் நிரந்திரமாக பணியமர்த்தப்பட்டிந்தனர்

ஆகையால் இவ்வூருக்கு மேற்தலை தஞ்சவூர் என்று பெயர் ஏற்பட்டது

ஆனால் வெறும் ஆயிரம் நபர்களை பெற்று இருந்த இராணுவ பாசறையான "சூரலூரான அரிய பிராட்டி நல்லூர்"(சூலூர், அரசூர் சேர்ந்த பகுதி) கொங்கு நாட்டின் இராணுவ தலமையிடம் என்று கல்வெட்டுக்கள் கூறும்

இன்றும் சூலூரில் இந்திய இராணுவத்தின் பயிற்சி மையம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அன்னூரில் முப்பதற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கிறது

கோவில் விமானம் பழைய சோழர்கால கட்டிடத்திற்கு சான்றாக இன்றும் நீடித்துள்ளது

மேற்படி கல்வெட்டுகள் கூறும் செய்தியை அடுத்த பதிவில் பார்ப்போம்

படம்: கோ-நாட்டான் வீர சோழன்

படத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இருக்கும் கொங்கு சோழர் வருகையை சித்தரிக்கும் புடைப்பு சிற்பம் ஆகும்

இங்கிருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டரில் இருக்கும் ஆலத்தூரில் உள்ள சமண பள்ளியில் கொங்கு சோழனின் முதல் கல்வெட்டு கிடைக்கும்

கிபி 930 ஆம் ஆண்டை சேர்ந்த அதில்தான் கோ நாட்டான் வீர சோழன் பெயர் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்

வீர சோழன்
விக்கிரம சோழன்
என்பது கொங்கு சோழர்கள் மாறி மாறி புனைந்து கொள்ளும் பட்டம் ஆகும்

சரி அது என்ன கோ நாட்டார் என்பது பலருக்கு புரிவதில்லை

நாட்டார் என்பது வெள்ளாளரில் இருக்கும் ஒரு பிரிவு

கோ என்றால் தலைவன் என்று பொருள் அதாவது நாட்டார்களின் தலைவன் என்பதன் இலக்கண சொல்தான் கோ நாட்டான் என்பது

நாட்டார்கள் பற்றி எனது பழைய பதிவுகளில் காண்க

தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம்



No comments:

Post a Comment